Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

PM Modi Expressed Deep Shock : மும்பையில் இருந்து பாரமதிக்கு சென்ற அந்த சிறிய ரக விமானம், தரையிறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, இந்த விபத்தில் சிக்கிய அஜித்பவார் உட்பட 4 பேர் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!
விமான விபத்தில் அஜித் பவார் மரணம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Jan 2026 11:01 AM IST

மகாராஷ்டிரா, ஜனவரி 28: விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மரணமடைந்துள்ளார். மும்பையில் இருந்து பாராமதி சென்ற அந்த சிறிய ரக விமானம் தரையிறங்கிய போது, விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் அஜித் பவாருடன், மேலும் சிலர் பயணித்துள்ளனர். தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த அஜித் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது தொகுதியான பாராமதியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அஜித் பவார் விமானத்தில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தரையிறங்கிய போது விபத்து:


தொடர்ந்து, கீழே விழுந்து நொறுங்கிய அந்த விமானம், தீப்பிடித்தும் எரிந்துள்ளது. இதில், அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, அஜித் பவார், அவரது உதவியாளர்கள் 2 பேர்,  விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து விபத்தில் சிக்கயவர்கள் உள்ளூர்வாசிகளே விரைந்து சென்று மிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராமதி விரையும் குடும்பத்தினர்:

அஜித் பவார் சென்ற அந்த சிறிய ரக விமானம் இன்று காலை 8.45 மணிக்கு விபத்தில் சிக்கியது தெரியவந்தது. முதலில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. தொடர்ந்து, அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து அஜித் பவாரின் குடும்பத்தினர் பாராமதிக்கு பயணித்துள்ளனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் பாராமதி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவர்:

அஜித் பவார் மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவர் ஆவார். தேசியவாத காங்கிரஸ கட்சி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் தான் அஜித் பவார். அங்கு பல்வேறு பரபரப்புகளை உருவாக்கி துணை முதல்வராக அஜித் பவார் பதவி வகித்து வந்தார். காங்கிரஸ், பாஜக, சிவசேனா கட்சிகள் தலைமையிலான கூட்டணி அரசுகளில் துணை முதல்வராக பதவி வகித்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து பிளவை ஏற்படுத்தி தனியாக இயங்கி வந்தார்.

தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு சரத்பவார் கட்சியுடன் மீண்டும் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இரு கட்சிகளும் இணைவதற்கான முன்னோட்டமாக உள்ளாட்இச தேர்தலில் பல இடங்களில் இணைந்து போட்டியிட்டன. இந்த நிலையில், இன்றைய தினம் விமான விபத்தில் மரணமடைந்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

அஜித் பவார் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பிரதமர், மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த கடின உழைப்பாளி அஜித் பவார். நிர்வாக விஷயங்களைப் பற்றிய அவரது புரிதலும், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி எனக் குறிப்பிட்டுள்ளார்