Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு மணமகளை அடித்து கொன்ற மணமகன்.. பகீர் சம்பவம்!

Groom Murders Bride Before One Hour Of Marriage | குஜராத்தில் திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மணமகன், மணமகளை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணமகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு மணமகளை அடித்து கொன்ற மணமகன்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Nov 2025 22:07 PM IST

காந்தி நகர், நவம்பர் 16 : குஜராத் (Gujarat) மாநிலம், பாவ்நகர் பகுதியை சேர்ந்தவர் சாஜன் பரயப்பா. இவருக்கும் சோனி ஹிம்மத் என்ற இளம் பெண்ணுக்கும் நேற்று (நவம்பர் 15, 2025) திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மணமகனுக்கும்,  மணமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது அப்படியே சண்டையாக மாறியுள்ளது.

திருமண சேலை மற்றும் பணம் தொடர்பாக உருவான சண்டை

அதாவது மணகன் சாஜனுக்கும், மணமகள் சோனிக்கும் இடையே திருமண சேலை மற்றும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணமகன் சோனியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதுமட்டுமன்றி, சோனியின் தலையை அவர் வேகமாக சுவற்றில் மோதியுள்ளார். இதனால் மணமகள் சோனி பலத்த காயமடைந்துள்ளார். சுய நினைவு இன்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

திருமண மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மணமகன்

மணமகள் உயிரிழந்ததை அறிந்த மணமகன் திருமண மண்டபத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில், மணமகள் அறைக்கு சென்று பார்த்த உறவினர்கள் அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மணமகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?

மணமகனை வலை வீசி தேடி வரும் போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மணமகன் சாஜனை வலை வீசி தேடி வருகின்றனர். மணமகன் சாஜன் மற்றும் மணமகள் சோனி ஆகிய இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக மணமகளை, மணமகன் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.