Narendra Modi: அரசியல் வித்தகர்.. பிரதமர் மோடி வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்!
Happy Birthday PM Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வாட்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, பாஜகவில் வளர்ச்சி, குஜராத் முதல்வராகப் பதவி ஏற்பு, மற்றும் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றது என அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகமளிப்பதாக உள்ளது.

பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாதாரண ஒரு மனிதர் கூட இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்புக்கு வரலாம் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி திகழ்கிறார். அவர் கடந்து வந்த பாதை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். 1950 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள மேக்ஸானா மாவட்டத்தில் உள்ள வாட் நகரில் செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு நடுத்தர குடும்பத்தில் தாமோதர் தாஸ் மோதி – ஹீராபென் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக நரேந்திர மோடி பிறந்தார். இந்த தம்பதியினருக்கு ஆறு மகன்கள் இருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். மீது தீராத பற்று
பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்எஸ் அமைப்பு மீது பற்று கொண்டிருந்த நரேந்திர மோடி தனது 8வது வயதில் அந்த அமைப்பில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார் குடும்ப சூழல் காரணமாக குடும்பம் அவரின் இருபதாவது வயதில் குஜராத்தில் மிகப்பெரிய நகரமாக அறியப்படும் அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தது. இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைந்து கொண்டு தீவிரமாக கட்சிப் பணியாற்றினார். உறுப்பினராக சேர்ந்த ஒரு வருட காலத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
Also Read: ரஷ்ய அதிபருடன் கலகலவென உரையாடிய பிரதமர் மோடி!
இதனை அடுத்து சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானி ரத யாத்திரை மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. அவர் சிறப்பாக செயல்பட்டதை கவனித்த அன்றைய பாஜக தலைவராக இருந்த அத்வானி 1998 ஆம் ஆண்டு நடந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலில் பொறுப்பாளராக மோடியை நியமித்தார்.
முதலமைச்சர் முதல் பிரதமர் பதவி வரை
அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்ற போது மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் 2001 ஆம் ஆண்டு பதவி விலகிய நிலையில் அப்போது நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி மாநிலத்தின் முதல்வராக 2001 அக்டோபர் 7ம் தேதி பொறுப்பேற்றார்.
2002 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கு அடுத்த நடந்த இடைத்தேர்தல், 2007, 2012 ஆகிய 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்று நான்கு முறை குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி ஆட்சி செய்துள்ளார். மேலும் 2001 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்ததால் அம்மாநிலத்தின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைத்தது.
Also Read: வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!
இப்படியான நிலையில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் பாஜக 282 இடங்களையும், 2019 தேர்தலில் 303 இடங்களையும், 2024 தேர்தல்களில் 240 இடங்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக அவர் பதவி வகித்து வருகிறார். தன் வாழ்க்கையில் தொடக்க காலத்தில் நிதி சவால்கள் இருந்தபோதிலும், தான் ஒருபோதும் வறுமையை அனுபவித்ததில்லை என்று மோடி ஒருமுறை தெரிவித்தார். வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனையாளராக இருந்து இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது வரையிலான அவரது பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைந்தது என்றே சொல்லலாம்.