தரையிறங்காமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம் – அலறிய பயணிகள் – திக் திக் நிமிடம்
Mid Air Turbulence : ஹைதராபாத்திலிருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி நோக்கி சென்ற ஃபிளை91 ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலைை காரணமாக, பயணிகளுக்கு சுமார் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஹைதராபாத்திலிருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி நோக்கி சென்ற ஃபிளை91 ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலைை காரணமாக, பயணிகளுக்கு சுமார் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐசி3401 என்ற இந்த விமானம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து ஏப்ரல் 20, 2026 பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் மாலை சரியாக 4.30 மணிக்குள் ஹூப்ளி சென்றடைய வேண்டும். இந்த நிலையில் ஹூப்ளி அருகே சென்ற போது, அந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியைமல் போனது. இதனால் விமானிகள் விமானத்தை தரையிறக்கும் முயற்சியை கைவிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வானில் வட்டமிட்டபடி இருந்தனர்.
4 மணி நேரம் நீடித்த பரபரப்பு
விமானம் முந்த்கோட், தாவணகெரே, சிவமொகா போன்ற பகுதிகளின் மேல் சுமார் 4 நேரம் விமானம் பறந்தபடி இரு்தது. இந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தால் அலறி துடித்தனர். பலர் கைகளை கூப்பி தங்கள் இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்தனர். இதனால் விமானத்தில் பதற்றம் அதிகரித்தது.
இதையும் படிக்க : டெல்லியில் ஒரு வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை.. கில்லாடி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
இந்த நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ஓ மை காட் என பயத்தில் பலரும் கத்தும் குரல்கள், அழுகைகள், பதற்றம் ஆகியவை தெளிவாக காணப்பட்டன. சில பயணிகள் விமானிகளிடம் பெங்களூருவுக்கு திருப்புங்கள், அல்லது பெல்காவிற்கு செல்லுங்கள் என கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனற்.
இதனையடுத்து பயணிகளிடம் பேசிய விமானி, நாங்கள் விமானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். அனைவரும் தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று அறிவுறுத்தினர். இருப்பினும் பயணிகள் அமைதியடையவில்லை. இதனால் விமானத்தில் பதற்றம் நீடித்தபடியே இருந்தது. மற்றொரு பக்கம் தங்களுக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை, விமான நிறுவனம் எங்களுக்கு தொடர்பு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினர்.
இதையும் படிக்க : 5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!
பின்னர் பாதுகாப்பு அடிப்படையில் விமானம் கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றிவிடப்பட்டது. இதனையடுத்து மாலை 7.30 மணியளவில் விமானம் பாதுகாப்பு தரையிறங்கியது. இந்த நிலையில் விமான நிறுவனம் விளக்கமளித்தது. அதன் படி, விமானத்தில் எந்த தொழில்நுட்ப கோளாறும் இல்லை. மோசமான வானிலை காரணமாகவே தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக விமானம் திசை மாற்றப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பில் எந்த மாற்மும் செய்யவில்லை.