அகமதாபாத் விமான விபத்து.. டாக்டர் எடுத்த கடைசி செல்ஃபி.. குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்!

Ahmedabad Plane Crash : அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் 5 பேர் உயிரிழந்துள்ளனர். லண்டன் செல்ல இருந்த மருத்துவர் கோமி வியாஸ், அவரது கணவர் பிரதிக் ஜோஷி அங்கு செல்ட்டில் ஆவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்து, தனது மூன்று குழந்தைகளுடன் பயணத்தை தொடங்கினர். விமானம் புறப்பட்டபோது குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

அகமதாபாத் விமான விபத்து.. டாக்டர் எடுத்த கடைசி செல்ஃபி.. குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்!

உயிரிழந்த குடும்பம்

Updated On: 

13 Jun 2025 06:43 AM

 IST

குஜராத், ஜூன் 13 : அகமதாபாத் விமான விபத்தில் (Ahmedabad Plane Crash) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சில மணி நிமிடங்களுக்கு முன்பு, தாங்கள் எடுத்த செல்ஃபியை உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு சோக நாளாக அமைந்தது. 2025 ஜூன் 12ஆம் மதியம் 1.30 மணியளில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா (Air India) விமானம் விபத்துக்குள்ளானது. போயிட் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி விடுத்தியின் மேல் விழுந்து தீப்பிடித்தது.

அகமதாபாத் விமான விபத்து

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.  விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்டுகள், 10 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 241 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இந்த விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில், மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியதில் மருத்துவ மாணவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி இருக்கிறது.  இந்த சூழலில், சமூக வலைதளங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, அவர்கள் விபத்திற்கு சில மணி நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மருத்துவர் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி மருத்துவர் கோமி வியாஸ், அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவர் கோமி வியாஸ் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி


அவரது கணவர் பிரதீக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கோமி வியாஸ் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர். கணவருடன் லண்டனில் செட்டில் ஆவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் கோமி வியாஸ்.

தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு லண்டன் செல்ல சமீபத்தில் பிரதிக் ஜோஷி ராஜஸ்தான் வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூன் 12ஆம் தேதியான நேற்று அவர்கள் ஐந்து பேரும் லண்டன் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் சென்றனர்.

அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைசியாக எடுத்துக் கொண்ட செல்ஃபி பலரையும் கலங்க வைத்துள்ளது. அந்த செல்ஃபியில் டாக்டர் ஜோஷி, அவரது மனைவியும் ஒரு பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் மூன்று குழந்தைகள் எதிர் சீட்டில் அமர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது.. முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி.. அரசியலில் புதிய சகாப்தம்!!
தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?
கண்ணியம் இல்லாமல் வாழ முடியாது.. எயிட்ஸ் பாதிப்பு ரத்தம் உடலில் செலுத்தப்பட்டதால் இளம் பெண் விபரீதம்!
ரூ.40 லட்சம் LPA.. திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேபிடோ ஓட்டும் டெக்கி!
காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி
மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல் - பரபரப்பு தகவல்
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..