கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பம்.. மாந்திரீகம் செய்வதாக எழுந்த சந்தேகத்தால் விபரீதம்!

amily of Three Brutally Killed By Neighbours | ஜார்கண்டில் வசித்து வந்த குடும்பம் ஒன்று தங்களது உறவினர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி மற்றும் அவர்களது 12 வயது மகன் உட்பட மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பம்.. மாந்திரீகம் செய்வதாக எழுந்த சந்தேகத்தால் விபரீதம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Mar 2026 23:28 PM

 IST

ராஞ்சி, மார்ச் 18 : ஜார்கண்ட் (Jharkhand) மாநிலம், கோடா மாவட்டம், தங்கா தோலா கிராமத்தை சேர்ந்தவர் தர்பாரி முர்மு என்ற 55 வயது நபர். இவருக்கு 50 வயதில் மிகி பாஸ்கி என்ற மனைவி இருந்துள்ளார். பழங்குடியின சமூதாயத்தை சேர்ந்த இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பம்

இந்த மூன்று பேரும் மார்ச் 16, 2026 அன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், திடீரென தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கணவன், மனைவி மற்றும் சிறுவன் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் தேர்தல்களில் யாரெல்லாம் வாக்களிக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?

மாதிரீகம் செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தில் நடந்த கொலை

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், உயிரிழந்த தம்பதியினர் மாந்திரீக பூஜை மூலம் சூனியம் செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தில் நடந்த கொலை என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் பேய் நடமாட்டம்?.. உண்மை என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக  தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரியையும் கொலையாலிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி அவர்களின் 12 வயது மகன் என அனைவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்