பீகார் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Bihar Assembly Election Date : பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்டோபர் 6) மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  பீகார் தேர்தல் தேதியை அறிவிப்பார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல்

Updated On: 

06 Oct 2025 10:54 AM

 IST

பீகார், அக்டோபர் 06 : பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்டோபர் 6) மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேசிய தலைநகரில் உள்ள விஞ்ஞான் பவனில் இருந்து தேர்தல் ஆணையம் பீகார் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கும். கடைசியாக கொரோனா தொற்றுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன. எனவே, இந்த முறை ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடமாநிலங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது பீகார் மாநிலம். பீகார் மாநிலம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டப்பேரவை தேர்தலாக இருக்கட்டும் என்டிஏ கூட்டணி இம்மாநில பெரிதும் முக்கியத்தும் பெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலம் மட்டும் 80 சீட்டுகளை தருகிறது.

இதற்கிடையில், விரைவில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2025 நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசியாக கொரோனா தொற்று மத்தியில் 2020ஆம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தது. அந்த தேர்தலில் என்டிஏ கூட்ணி வெற்றி பெற்றது. தற்போது என்டிஏ கூட்டணி 131 இடங்களை கொண்டுள்ளது. இதில், பாஜக 80, ராஷ்டிரிய ஜனதா தளம் 45, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4, 2 சுயேட்சைகள் உள்ளனர். இந்தியா கூட்டணியில் 111 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் 19, ராஷ்டிரிய ஜனதா தளம் 77, சிபிஐ 11, சிபிஎம் 4 என உள்ளன.

Also Read : டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை வேண்டும் எனில் 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.  வரும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு கடும் போட்டி நிலவும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில்,  2025 அக்டோபர் 6ஆம் தேதியான இன்று மாலை 4 மணிக்கு  இந்திய தேர்தல் ஆணையம்  சட்டப்பேரவை தேர்தல் தேதியை  அறிவிக்க உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  பீகார் தேர்தல் தேதியை அறிவிப்பார்.

Also Read : எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமி.. கையை வெட்டி எடுத்த மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

அண்மையில் வாக்காளர்கள் விவரங்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, பீகார் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு திருத்தத்திற்கு முன்பு, 2025 ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பு பீகாரில் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.