மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்த முதியவர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகிய பரிதாபம்!

Elderly Man Suffers Severe Electric Shock Burns | மும்பையில் மின்சார ரயிலின் மேற்கூரை மீது பயணம் செய்த முதியவர் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றபோது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்த முதியவர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகிய பரிதாபம்!

பாதிக்கப்பட்ட முதியவர்

Updated On: 

24 Sep 2025 08:33 AM

 IST

மும்பை, செப்டம்பர் 24 : மும்பையில் (Mumbai) மின்சார ரயிலின் (Electric Train) மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த முதியவர் மேற்கூரையில் அமரந்து பயணம் செய்த நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்துள்ளார். இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்

மும்யையை அடுத்த திவா ரயில் நிலையத்திற்கு நேற்று (செப்டம்பர் 24, 2025) அன்று காலை 10 மணி அளவில் ரயில் ஒன்று வந்துள்ளது. அந்த ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து முதியவர் ஒருவர் பயணம் செய்துக்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், ரயில் நிலையத்திற்கு வந்ததும் அவர் மேற்கூரையில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது அங்கு மேலே சென்றுக்கொண்டு இருந்து உயர் மின் அழுத்த கம்பி முதியவர் மீது உரசியுள்ளது. இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதையும் படிங்க : 2 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்.. மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் வெறிச்செயல்!

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் முதியவர்

இந்த சம்பவம் தொடர்பாக சக பயணிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் முதியவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த முதியவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதையும் படிங்க : அதிர்ந்த பெங்களூர் பஸ் ஸ்டாண்ட்… மகள் கண்முன்னே பெண் துடிதுடித்து பலி… கணவர் செய்த கொடூரம்!

மின்சார ரயிலின் மேற்கூரை மீது அமர்ந்து பயணம் செய்த முதியவர் மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.