ED Raid : ஒரே நாளில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
ED Raids 13 Locations In India | அமெரிக்காவில் டங்கி முறைப்படி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில், இந்த முறைகேடுக்கு பின்னால் ஹவாலா பண கும்பல் இருப்பதை கண்டு பிடித்துள்ள அமலாக்கத்துறை இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 13 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, டிசம்பர் 20 : இந்தியாவில் நேற்று (டிசம்பர் 19, 2025) ஒரு நாளில் மட்டும் அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. சட்ட விரோத மற்றும் ஹவாலா பணம் தொடர்பாக இந்தியாவில் விசாரணையை தொடங்கியுள்ள அமலாக்கத்துறை அதன் ஒரு பகுதியாக இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இந்த அதிரடி சோதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே நாளில் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அங்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேரிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 2025 பிப்ரவரி மாதம் 330 இந்தியர்களை டிரம்ப் இந்தியாவுக்கு நாடு கடத்தினார்.
இதையும் படிங்க : 19 பேரை பலி வாங்கிய உபி சாலை விபத்து.. உடல்களை அடையாளம் காணுவதில் நீடிக்கும் சிக்கல்!
அவர்கள் டங்கி பாதை எனும் சட்ட விரோத முறைப்படி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய ஏஜெண்டுகள் அவர்களை முறைகேடாக அமெரிக்காவுக்கு அனுப்பி கோடி கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிய வந்துள்ளது.
டங்கி பாதை மோசடி தொடர்பாக விசாரணையை கையில் எடுத்துள்ள அமலாக்கத்துறை
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த மோசடிக்கு பின்னால் இந்திய முகவர்கள், வெளிநாட்டு முகவர்கள், ஹவாலா கும்பல் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதையும் அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை நேற்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இதையும் படிங்க : இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது.. பகீர் சம்பவம்!
ஒரே நாளில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 13 பகுதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது. டங்கி மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் 2வது மற்றும் 3வது மட்டத்தில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோரின் இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.