டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்… உமர் நபியின் நண்பரை கைது – கார் பறிமுதல்
Delhi Car Blast Arrest: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உமர் நபியின் நண்பரான அமீர் ரஷீத் அலி மீது, செங்கோட்டை கார் குண்டுவெடிப்புக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி குண்டு வெடிப்பில் உமர் நபியின் நண்பர் கைது
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு (Delhi Bom Blast) குறித்து தேசிய விசாரணை ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டாக்டர் உமரின் நண்பர் அமீர் ரஷீத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உமர் நபியின் நண்பரான அமீர் ரஷீத் அலி மீது, செங்கோட்டை கார் (Car) குண்டுவெடிப்புக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேசிய விசாரணை ஆணையம் தற்போது இதுவரை 73 சாட்சிகளை விசாரித்து வருகிறது, மேலும் பல மாநிலங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உமர் நபியின் நண்பர் அமீர் ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி குண்டு வெடிப்பில் சதி செய்ததாக ஒருவர் கைது
டெல்லியில் நடந்த செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேசி விசாரணை ஆணையம் ஒரு பெரிய திருப்புமுனையை அடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உமர் நபியுடன் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி டெல்லியில் நவம்பர் 16, 2025 அன்று கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் சம்போரா பகுதியைச் சேர்ந்த அமீர், உமர் நபியுடன் சதி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் அமீரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் உமர் நபி பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் தடயவியல் சோதனைகள் நடந்து வருகின்றன.
73 பேரிடம் விசாரணை
கடந்த நவம்பர் 10, 2025 ஆம் தேதி டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். இதுவரை 73 சாட்சிகளை தேசிய விசாரணை ஆணையம் விசாரித்துள்ளது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச காவல்துறையினருடன் இணைந்து பல மாநிலங்களில் விசாரணை நடந்து வருகிறது. ஒரு பெரிய சதித்திட்டத்தை வெளிக்கொணர நிறுவனம் ஏராளமான தடயங்களை ஆராய்ந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் சம்பூராவில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர், தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் உமர் நபியுடன் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி செய்ததாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு நடத்த வாகனத்தில் கொண்டு செல்லப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருள் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு உதவுவதற்காக அமீர் டெல்லிக்கு வந்தார்.
இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு.. 7 பேர் உயிரிழந்த சோகம்..
மேலும் தடயவியல் விசாரணைகள் மூலம் இறந்த ஓட்டுநர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியரான உமர் நபி என அடையாளம் கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணையின்போது உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களுக்காக வாகனம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது