நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி? முழு விவரம்

CUET UG Result 2025 : மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு முடிவுகள் 2025 ஜூலை 4ஆம் தேதியான நாளை வெளியாகிறது. எனவே, மாணவர்கள் க்யூட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி? முழு விவரம்

க்யூட் தேர்வு முடிவுகள்

Updated On: 

03 Jul 2025 21:38 PM

டெல்லி, ஜூலை 03 : 2025ஆம் ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள் (CUET UG Result) 2025 ஜூலை 4ஆம் தேதி வெளியாகுகிறது. மாணவர்கள் என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் cuet.nta.nic.in மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்பிடிப்பில் சேருவதற்காக க்யூட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மட்டுமில்லாமல், முதுகலை க்யூட் தேர்வுகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA)  நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 49 மத்திய பல்கலைக்கழகங்கள், 35 மாநில பல்கலைக்கழகங்கள், 129 தனியார் பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கு க்யூட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வின் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை க்யூட் தேர்வுகள் 2025 மே 13ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. இத்தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.

நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்

மொத்தம் 37 பாடங்களுக்கு 2025ஆம் ஆண்டில் தேர்வு நடந்தது. 2024ஆம் ஆண்டில் 63 பாடங்களுக்கு நடந்திருந்த நிலையில், தற்போது குறைக்கப்பட்டது. மேலும், 2025ஆம் ஆண்டில் தேர்வு நேரம் 105 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாக குறைக்கப்பட்டு, தேர்வு நடந்தது.  இதனைத் தொடர்ந்து, க்யூட் தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பு 2025 ஜூன் 17ஆம் தேதி வெளியானது.

இதில் மாணவர்கள் வைத்த முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜூலை 1ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதன் மூலம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, க்யூட் தேர்வு முடிவுகள் 2025 ஜூலை 4ஆம் தேதியான நாளை வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

  • முதலில் மாணவர்கள் cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் CUET UG 2025 என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனைத் தொடர்ந்து, விண்ணப்ப எண், பாஸ்வோர்டு அல்லது பிறந்த தேதி, CAPTACHA உள்ளிட்ட விவரங்களை உள்ளீட வேண்டும்
  • தொடர்ந்து, க்யூட் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதனை மாணவர்கள் Download என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்