குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
4 Houses Burned and Tuned Into Ashes | ஆந்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டின் முற்றத்தில் விளக்கு ஏற்றி வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், அங்கு வந்த காகம் ஒன்று அந்த விளக்கை எடுத்துச் சென்று குடிசை வீடு ஒன்றின் மீது போட்ட நிலையில் வரிசையாக 4 குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

மாதிரி புகைப்படம்
நகரி, நவம்பர் 16 : ஆந்திர மாநிலம் (Andhra Pradesh) விஜயநகரம் மாவட்டம் கோநூரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அங்கு வந்த காகம் ஒன்று அந்த விளைக்கை எடுத்துச் சென்றுள்ளது. பிற்கு அந்த விளக்கை குடிசை வீடு ஒன்றின் மீது போட்டுள்ளது. இதன் காரணமாக புகைந்துக்கொண்டு இருந்த விளக்கு திரியில் இருந்து தீப்பற்றிய நிலையில், குடிசை தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
நான்கு குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்
அந்த ஒரு குடிசையில் தீப்பற்றிய நிலையில், அந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென அடுத்து அடுத்து மூன்று குடிசைகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த குடிசை வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து பொதுமக்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், சிலர் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்.. தானும் தற்கொலை!
தீயில் எரிந்து கருகிய நான்கு குடிசை வீடுகள்
குடிசைகள் தீப்பற்றி எரிந்த நிலையில், அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். அதற்குள்ளாக இங்கு இருந்த நான்கு குடிசை வீடுகள் அடுத்து அடுத்து தீயில் கருகி நாசமாகியுள்ளன. தங்களது வீடுகள் தீப்பற்றி எரிவதை கண்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.
இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. கொழுந்தனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!
விவசாயி கடனாக வாங்கி ரூ.1 லட்சம் எரிந்து நாசமானது
இந்த தீ விபத்தின் போது நம்பூரி கோபி என்பவர் தனது வீட்டில் விவசாய கடனாக வாங்கி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மற்றும் அதனுடன் வைத்திருந்த அரை பவுன் நகை என அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அந்த நான்கு குடிசை வீடுகளை இழந்த பொதுமக்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.