கர்ப்பத்தில் குழந்தையின் சிக்கலை கண்டுபிடிக்காத மருத்துவமனை.. ரூ.1 கோடி இழப்பீடு!

Baby Born Without Eyes In Telangana | தெலங்கானாவில் கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை கண்கள் இல்லாமல் பிறந்துள்ளது. மாதம் மாதம் தவறாமல் பரிசோதனை மேற்கொண்ட போதும் குழந்தை இப்படி பிறந்த நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பத்தில் குழந்தையின் சிக்கலை கண்டுபிடிக்காத மருத்துவமனை.. ரூ.1 கோடி இழப்பீடு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 May 2026 00:07 AM

 IST

ஆதிலாபாத், மே 11 : தெலங்கானாவில் ஒவ்வொரு மாதமும் பரிசோதனை செய்தும், குழந்தைக்கு கண் குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடிக்காத சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், மருத்துவர்களின் கவன குறைவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட சம்பவம்  குறித்து விரிவாக பார்க்கலாம்.

கண் இல்லாமல் பிறந்த பிறந்த குழந்தை – மருத்துவர்கள் செய்த தவறு

தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கிய ஸ்ரீ. இவர் கர்ப்பமான நிலையில், ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், பிரசவ தேதி வந்தது அந்த பெண்ணுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை கண் இல்லாமல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : தெலங்கானா பயணம் செய்யும் பிரதமர் மோடி.. ரூ. 9,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பரிசோதனை ஸ்கேன் என அனைத்தும் செய்தும், குழந்தை இத்தகைய மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது குறித்து குழந்தையின் தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுத்தியுள்ளார். இந்த நிலையில், கடும் கோபத்திற்கு உள்ளான அந்த பெண், இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் ஆணையத்தை அணுகி நியாயம் கேட்டுள்ளார்.

குழந்தைக்கு பாதிப்பு – ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆணையர் ஜபேஸ் சாமூவேல் முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி