எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமி.. கையை வெட்டி எடுத்த மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Child Lost Arm in Wrong Treatment | கேரளாவில் 9 வயது சிறுமி ஒருவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமி.. கையை வெட்டி எடுத்த மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

04 Oct 2025 13:26 PM

 IST

பாலக்காடு, அக்டோபர் 04 : கேரளாவில் (Kerala) கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தவறாக சிகிச்சை அளித்ததால், சிறுமி முழங்கை வரை கையை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட சிக்கல் காரணமாக கை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமிக்கு கை அகற்றப்பட்டது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமிக்கு சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட சிக்கல்

கேரளா மாநிலம் பாலக்கோடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி வினோதினி. இவர் விளையாடிக்கொண்டு இருக்கும்போது, கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டுள்ளனர். ஆனால், கட்டு போட்டதும் சிறுமியின் கையில் வீக்கம் ஏற்பட்டதோடு நீர் கட்டி உள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார்.

இதையும் படிங்க : மகளை அடித்துக்கொன்ற தாய்.. தானும் தூக்கிட்டு தற்கொலை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!

அறுவை சிகிச்சை மூலம் கையை அகற்றிய மருத்துவர்கள்

சிறுமிக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் கையை நீக்கியுள்ளனர். அதாவது சிறுமியின் முழுங்கை வரை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் கையை வெட்டி எடுத்தது குறித்து அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமன்றி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு.. முதுகெலும்பு வளர்ந்திருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்

சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவையும் அவர் நியமனம் செய்துள்ளார். இந்த விவகாரம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுமிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.