சத்தீஸ்கரில் அதிரடி என்கவுன்டர்…மேலும் 6 பயங்கரவாதிகளின் சடலம் மீட்பு!

Terrorists Bodies Recovered: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கி சண்டையில் 18 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தற்போது, மேலும், 6 பயங்கரவாதிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் அதிரடி என்கவுன்டர்...மேலும் 6 பயங்கரவாதிகளின் சடலம் மீட்பு!

பயங்கரவாதிகள் மீது என்கவுன்டர்

Updated On: 

04 Dec 2025 17:28 PM

 IST

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் மேற்கு பஸ்தார் பிரிவு மற்றும் பிஎல்ஜிஏ நிறுவனத்தின் எண் 2 மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், 12 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் மேலும் சில பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில், மேலும் 6 பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 18- ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

நேற்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் ஒரு பிரிவான மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் மோனு வடாதி, காவலர் துகாரு கோண்டே மற்றும் ஜவான் ரமேஷ் சோதி 3 காவலர்கள் வீர மரணமடைந்தனர். சுமார் 12 மணி நேரம் நீடித்த நீண்ட இடைவிடாத துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலை வரை 12 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறைத் தலைவர் சுந்தர்ராஜ் பி தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) காலை வரை அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் படிக்க: ரயில்வே காவலர் மீது துப்பாக்கி சூடு…சக காவலர் வெறிச் செயல்…என்ன காரணம்!

ரூ.8 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்ட பயங்கரவாதி

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் ஒருவர் மோடியாமி வெல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வெல்லா மாவோயிஸ்டுகளின் பிஎல்ஜிஏ (மக்கள் விடுதலை கெரில்லா படை) நிறுவனத்தின் 2-வது பிரிவின் தளபதியாக செயல்பட்டார். மேலும், பாதுகாப்புப் படையினர் மீதான பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவராவார். இதில், 2020 மின்பா தாக்குதலில் (சுக்மா) 17 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர், மற்றும் 2021- இல் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட தெக்கல்குடெம் (பிஜாப்பூர்) தாக்குதல் ஆகியவை அடங்கும். வெல்லாவின் தலைக்கு ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

281 பயங்கரவாதிகள் மீது என்கவுன்டர்

சம்பவ இடத்திலிருந்து ஒரு லைட் மெஷின் கன், சிங்கிள் லோடிங் ரைபிள்ஸ் (SLR), இன்சாஸ் ரைபிள்ஸ், .303 ரைபிள்ஸ் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் சமீபத்திய நடவடிக்கையின் மூலம், இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் 281 நக்சலைட்டுகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். இடது சாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மார்ச் 2026- ஆம் ஆண்டு 31- ஆம் தேதி வரை மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க: பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம்…16 ஆண்டு கால தாமதத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்!

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி