மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!
Central Govt Warns Ccensus Details: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்க கூடாது என்றும், இது போன்ற கேள்வி கேட்கப்பட்டால் புகார் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. முறையான தரவு சேகரிப்பிற்கு சாத்தியமான மோசடிக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் அடையாளம் காண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. முக்கியமான நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இது தவிர ஏதேனும் மோசடி நடைபெற்றால் சஞ்சார் சாத்தி செயலில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை, பாலின விகிதம், தனிநபர் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு உள்ளிட்ட நாட்டின் முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் மோசடி வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற எந்த ஒரு முயற்சியையும் அடையாளம் காணுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள்
பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, வயது, பாலினம் மற்றும் தொழில், வீட்டு உரிமையாளர் நிலை, வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்படும். ஆனால், இதை தவிர்த்து வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் அடையாள அட்டை எண்கள், பான் கார்டு எண்கள், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் உள்ளிட்ட சந்தேகத்துக்கிடமான கேள்விகளை கேட்கக்கூடாது. இது போன்ற கேள்விகளை எழுப்பினால் பதில் அளிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!
பொது மக்கள் விழிப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும்
தனது ஆலோசனையின் படி மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சாதனம் அல்லது நிதி பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கக் கூடிய டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், விவரங்களை உறுதிப்படுத்த ஒரு லிங்கை அனுப்பி உறுதி செய்யுமாறும், ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும், க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு மோசடி செய்பவர்கள் கேட்டால் இதுகுறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.
1930 என்ற இலவச எண்ணில் புகாரளிக்கலாம்
ஏதேனும் மோசடி நிகழ்ந்தால், சஞ்சார் சாத்தி செயலி வழியாக உடனே புகார் பதிவு செய்யலாம். இது போன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பாதுகாப்பதற்காக வங்கியுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இது குறித்த புகாரை cybercrime.gov.in இல் பதிவு செய்ய வேண்டும். தேசிய இணைய வழி குற்ற உதவி மையத்துக்கு 1930 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் குடும்ப விவரங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கவும் அரசு வழிவகை செய்துள்ளது.
மேலும் படிக்க: டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழப்பு.. ஏசி வெடித்ததே காரணம்?