இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!

Australian Travel Vlogger: இந்தியாவுக்கு அண்மையில் சுற்று வந்திருந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வெளிநாட்டினர் அனைவரும் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!

இந்தியாவுக்கு வெளிநாட்டினர் கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டும்

Updated On: 

22 Feb 2026 13:05 PM

 IST

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலா செல்லும் நபரான மெக்நாட் உலகம் முழுவதும் தனியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர், அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, அவர் தனது சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், உலகில் உள்ள அனைவரும் ஒருமுறையாவது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் காணப்படும் பனிமலைகள் முதல் மணல் நிறைந்த பாலைவனங்கள் வரையும், கடற்கரைகள் முதல் நீர்வீழ்ச்சிகள் வரை அனைத்தும் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு அற்புதமான உணவு மலிவு விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தங்களை உறவினர்கள் போல அழைத்துச் சென்று நடத்துவார்கள். நீங்கள் நாடு முழுவதும் ஹிட்ச் ஹைக்கிங் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

புதிய கண்ணோட்டத்தை காண இந்தியாவுக்கு சுற்றுலா செல்லலாம்

மேலும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேடிக்கையான திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு சவாரிகள் இங்கு உள்ளன. இவை அனைத்தையும் நாம் மனது குளிர அனுபவிக்கலாம். இந்தியாவுக்கு செல்வதற்கான உங்கள் அறிகுறி. இது உண்மையிலேயே இந்தியாவுக்கு பயணிக்க மிகவும் பாதுகாப்பான, மிகவும் மலிவான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இடமாகும். நீங்கள் ஒரு இளம் சுற்றுலா பயணியாக இருந்து, உலகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை காண விரும்பினால் தாராளமாக இந்தியாவுக்கு சுற்றுலா செல்லலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அசாமில் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம்.. வடகிழக்கின் முதல் ELF-இல் பிரதமர் மோடி

3.95 லட்சம் பார்வையாளர்களை பெற்ற வீடியோ

இந்த வீடியோவானது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு 3 லட்சத்து 95 ஆயிரம் பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கான கருத்துக்களையும் பெற்றுள்ளது. இதில், இந்தியா குறித்த அவரது கண்ணோட்டத்திற்கு பல்வேறு பயனர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வாழ்க்கை கட்டமைக்கப்பட்ட, திறமையான மற்றும் கணிக்க கூடிய அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழ்ந்த பிறகு, இந்தியா எனக்குள் மெதுவாக ஏதோ ஒன்றை இசைக்கிறது. வாழ்க்கை எப்போதும் உகந்ததாக இருக்க வேண்டியது அல்ல என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது.

இந்தியாவில் பிறந்ததில் மிகவும் பெருமை

சில நேரங்களில் அது உணர்த்தப்பட வேண்டியதாகும் ஒரு பயனர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் பிறந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், நமது கலாச்சாரம், நமது மரபுகள், மதிப்புகள் மற்றும் நமது நாட்டு மக்கள், நமது தேசத்தின் சிறப்பு உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்ததாக இருப்பதாக மற்றொரு நபர் கருத்து பதிவிட்டுள்ளார். இதேபோல மற்றொரு நபர் நன்றி சகோதரரே, இந்தியாவின் எதார்த்தத்தை நீங்கள் அறிந்திருப்பதாலும், உண்மையான இந்தியாவை பற்றி நீங்கள் கூறுவதாலும், உங்களது ஒவ்வொரு வார்த்தையும் நான் மதிக்கிறேன் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?

Related Stories
அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
“மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்
நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!