வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!

Assistant Manager Stole 2KGs of Customer Gold | பெங்களூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளர் அடகு வைத்த சுமார் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Feb 2026 10:41 AM

 IST

பெங்களூரு, பிப்ரவரி 15 : பெங்களூரில் (Bengaluru) உள்ள ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளர் அடமானம் வைத்த 2 கிலோவுக்கு அதிகமான தங்கம் காணாமல் போன வழங்க்கில், அந்த வங்கியின் துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளரின் நகைகளை அவர் திருடி விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கி துணை மேலாளரே வாடிக்கையாளரின் நகைகளை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன வாடிக்கையாளரின் 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள்

கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் உள்ள கிரிநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் உதவி மேலாளராக கிரண் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அடமான வைத்திருந்த சுமார் 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிரண் குமார் சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க : அசாமில் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம்.. வடகிழக்கின் முதல் ELF-இல் பிரதமர் மோடி

வாடிக்கையாளரின் தங்க நகைகளை திருடி விற்பனை செய்த துணை மேலாளர்

அதாவது அந்த வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்த கிரண் குமார் அந்த வாடிக்கையாளர்களின் நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அந்த வாடிக்கையாளரின் நகைகளை விற்பனையும் செய்துள்ளார். இது குறித்து தெரிய வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!

ரூ.4 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு

அந்த வங்கி துணை மேலாளர் திருடி விற்பனை செய்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். வங்கி மேலாளரே நகையை திருடி விற்பனை செய்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி.. ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..
மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
ஐடி டூ முதலீட்டு வங்கியாளர்.. ஐஐஎம்பி-யில் தங்கப் பதக்கம் வென்று த்வீத் மேத்தா சாதனை
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்