அசாம் ரயில் தண்டவாளத்தில் நள்ளிரவில் குண்டு வெடிப்பு.. அதிர்ச்சி சம்பவம்!
Assam Train Track Bomb Blast | அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரயில் தண்டாவளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரிசெய்யும் பணிகள் தீவிரம்
திஸ்பூர், அக்டோபர் 24 : அசாம் (Assam) மாநிலத்தின் திஸ்பூர் என்ற பகுதியில் நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக அந்த வழியாக செல்ல இருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசாம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – அதிர்ச்சி சம்பவம்
இந்திய மக்களுக்கு மிகவும் பிரதான போக்குவரத்தாக உள்ளது ரயில்கள் தான். குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்தாக ரயில்கள் உள்ள நிலையில், ரயில்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில், தான் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தொல்லை கொடுத்த மனைவி.. திருமணமான 5 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை!
குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை – அதிகாரிகள் தகவல்
அசாம் மாநிலம், கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளம் ஒன்றில் நள்ளிரவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அசாம் மற்றும் வடக்கு வங்காலம் செல்ல கூடிய ரயில்கள் பாதியிலே தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நின்றுக்கொண்டு இருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அரிந்து சென்ற அதிகாரிகள், பல மணி நேரம் போராடி தண்டவாளத்தை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்.. கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்!
இந்த சம்பவத்தின் போது அங்கு ரயில்கள் எதுவும் வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.