ஸ்ரீநகர் விமான நிலையத்தின் அனைத்து விமானங்களும் ரத்து.. கடும் பனிப்பொழிவால் நடவடிக்கை!
All Flights Are Cancelled In Srinagar | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநஜர் விமான நிலையத்தை பனி மூடியுள்ளதால் அந்த விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர் விமான நிலையம்
ஸ்ரீநகர், ஜனவரி 23 : மோனசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் (Jammu and Kashmir) உள்ள ஸ்ரீநகர் (Srinagar) விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த மற்றும் விமான நிலையத்திற்கு வர இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் விமான நிலைய அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரை வாட்டி வதைக்கும் கடும் பனிப்பொழிவு
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தொடர் பனிப்பொழிவால் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இவ்வாறு கொட்டித் தீர்த்து வரும் கடும் பனிப்பொழிவால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதையும் படிங்க : குடியரசு தின அணிவகுப்பு.. ஐரோப்பிய ஒன்றிய படைப்பிரிவு பங்கேற்பு
காஷ்மீரில் விமான போக்குவரத்து முழுவதும் நிறுத்தம்
Srinagar Airport addresses the season’s first major snowfall on January 23, which dumped up to 5 feet of snow across Kashmir, causing over 20 flight cancellations and blocking key roads.#Snowfall #JammuKashmir #Srinagar pic.twitter.com/1aKkjMdo0x
— Abhijit Pathak (@aajtakabhijit) January 23, 2026
ஜம்மு மற்றும் காஷ்மிரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தை கடும் பனி மூடியுள்ளது. அங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காஷ்மீருக்கு வரும் அனைத்து விமானங்களும், காஷ்மீரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில்…பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
ஸ்ரீநகரில் விமான சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளனர். வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.