விங் கமாண்டர் மரணம்… மனைவியாகவும், விமானப்படை அதிகாரியாகவும் அஞ்சலி… சோகத்தில் மூழ்கிய கிராமம்
Heartbreaking Last Goodbye: துபாயில் நடைபெற்ற ஏர்ஷோ விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது விமானப்படை அதிகாரியான அவரது மனைவி இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது.

ஏர் ஷோ நிகழ்வில் உயிரிழந்த நமன்ஷ் சயாலுக்கு இறுதி அஞ்சலி
துபாயில் (Dubai) கடந்த நவம்பர் 22, 2025 அன்று நடைபெற்ற ஏர்ஷோ (Air Show) நிகழ்வில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் போர் விமான விபத்தில் சிக்கியது. இந்த துபாய் ஏர் ஷோவில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு, அவரது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டம், பதியால்கர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அர மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் விங் கமாண்டர் நமன்ஷ் சயாலின் மனைவியும், இந்திய விமானப்படையில் பணியாற்றும் விங் கமாண்டருமான ஆஃப்ஷான் குடும்பத்தினர், உறவினர்கள் சூழ்ந்தநிலையில் கண்கலங்கியபடி தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திய வீடியோ நாடு முழுவதும் மக்களை கண் கலங்க வைத்துள்ளது.
கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திய விங் கமாண்டர்
துபாயில் நடைபெற்ற ஏர்ஷோ நிகழ்வில் உயிரிழந்த கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு அவரது சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் அவரது மனைவியும் சக விங் கமாண்டருமான ஆஃப்ஷான ஒரு மணைவியாகவும், விமானப்படை வீரராகவும் இறுதி மரியாதை செலுத்திய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தேஜஸ் விபத்தில் பலியான விங் கமாண்டர்.. சோகத்தில் மூழ்கிய அவரது சொந்த கிராமம்!
மனைவியாகவும் விமானப்படை வீரராகவும் இறுதி அஞ்சலி செலுத்தி ஆஃபான்ஷ்
#WATCH | Himachal Pradesh: Wing Commander Afshan salutes her husband, Wing Commander Namansh Syal, as she pays her last respects to him.
Wing Commander Namansh Syal lost his life in the LCA Tejas crash in Dubai on 21st November. pic.twitter.com/DPKwARut4r
— ANI (@ANI) November 23, 2025
இதையும் படிக்க : துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறித்து, “தன்னலம் பாராது நாட்டிற்காக பணியாற்றிய உயர்ந்த மனப்பான்மை கொண்ட, திறமையும் பொறுப்புணர்வும் நிறைந்த அதிகாரி என அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது. அறிக்கையில் மேலும், “அவரின் வீரத்தையும், இந்தியா மீது அவர் வைத்திருந்த பற்றையும், தியாகத்தையும் இந்திய விமானப்படை என்றும் நினைவுகூரும். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள், சக ஊழியர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த இறுதி மரியாதையில், அவரது கண்ணியமான ஆளுமை தெரிந்தது என்று கூறப்பட்டது. அவரது இறுதி மரியாதை வீடியோ நாட்டையே உலுக்கியது