Bollywood supports India: ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃப் அலி கானை கொண்டாடும் இந்தியர்கள்!
Aamir Khan and Saif Khan on Pahalgam Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஆமிர் கான் மற்றும் சைஃப் அலி கான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஆமிர் கான், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சைஃப் அலி கான், இந்திய ராணுவத்தின் துணிச்சலுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இருவரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டெல்லி, மே 10: பஹல்காம் தாக்குதல் (Pahalgam Terror Attack) மற்றும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய இராணுவம் தாக்கிய ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர்களான ஆமிர் கான் (Aamir Khan) மற்றும் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மனம் திறந்து பேசினர். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவுக்கு உத்தரவாதம் தேவை என்று அமிர் கானும், ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கு வணக்கம் என்று சைஃப் அலி கானும் தெரிவித்திருந்தனர். இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஆதரவாக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆமிர் கான் கருத்து:
We need justice and assurance that it won’t happen again, we believe in our govt, they’ll take actions on whoever has done this and bring them to justice – #AamirKhan on Pahalgam terrorist attack. pic.twitter.com/HQu2sTE6Nc
— Syed (@aamirsspk) May 10, 2025
கடந்த 2025 மே 6ம் தேதி அதாவது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடத்துவதற்கு ஒருநாள் முன்பு, ஏபிபி நடத்திய ஒரு நிகழ்ச்சியும் பேசிய ஆமிர் கான், “ எங்களுக்கு நீதி தேவை. இந்தியாவின் பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் நடக்காது என்ற உறுதியும் தேவை எங்கள் இந்திய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். பஹல்காம் தாக்குதலை நடத்திய சமூக விரோத சக்திகளுக்கு எதிராக இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்துவார்கள்” என்று தெரிவித்தார்.
சைஃப் அலி கான் கருத்து:
#SaifAliKhan has reacted to India and Pakistan’s ceasefire negotiations. He thanked the Indian armed forces for their bravery and courage during the difficult time.#Trending pic.twitter.com/X0OzyegdY9
— Filmfare (@filmfare) May 10, 2025
நடிகர் சைஃப் அலி கான் நேற்று அதாவது 2025 மே 9ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அதில், “பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது இந்திய அரசாங்கத்துடனும், அவர்கள் அளித்த பதிலடியையும் நான் முழு ஒற்றுமையுடன் ஆதரவையும் தெரிவிக்கிறேன். நமது மண்ணில் சமீபத்தில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலின் வன்முறையால் உடைந்து போன குடும்பங்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. நமது ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான நாம் அனைவரும் ஒற்றுமையான நிற்க பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.
போர் நிறுத்தம்:
இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அதாவது 2025 மே 10ம் தேதி போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டன. இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்திய ராணுவ நடவ்டிக்கைகளுக்கான இயக்குநரை அழைத்தார். இரு தரப்பினரும் நிலம், வான்வழி மற்றும் கடலில் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று கூறினார்.