Pregnant Womens: கர்ப்பிணிப் பெண்களே மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? சரிசெய்ய உதவும் சூப்பர் குறிப்புகள்!
Pregnant Womens Constipation Problem: கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஹார்மோன் மாற்றங்கள் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர் . புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பது செரிமான அமைப்பில் உள்ள தசைகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது உணவு மற்றும் மலம் குடல் வழியாக நகர்வதை மெதுவாக்கி, குடல் இயக்கத்தைக் குறைக்கிறது.

மலச்சிக்கல்
ஒரு குழந்தையின் (New Born Baby) பிறப்பு தாய்க்கு இரண்டாவது பிறப்பு என்றே சொல்லலாம். 9 மாதங்கள் கருப்பையில் ஒரு குழந்தையை சுமக்கும் போது, ஒரு பெண் பல சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவற்றில், கர்ப்பிணிப் பெண்களிடையே (Pregnant Womens) மலச்சிக்கல் மிகவும் பொதுவான பிரச்சினையாகும். பிரசவத்திற்குப் பிறகும் கூட சில பெண்களுக்கு குடல் மற்றும் வயிற்று பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சினைகள் செரிமான அமைப்பைத் தவிர கல்லீரல், பித்தப்பை, கணையம் மற்றும் பிற செரிமான உறுப்புகளை மோசமாக பாதிக்க செய்யும். சில பெண்களுக்கு கர்ப்பத்திற்கு முன்பே வயிறு தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு இருக்கலாம். இது கர்ப்ப காலத்தில் மேலும் அதிகரிக்கத் தொடங்குகிறது .
குடல் அசைவுகள் மெதுவாகி மலம் வெளியேறுவதில் சிக்கல்கள் இருக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்களிடமும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். எனவே, இதனை பற்றிய புரிதல்களை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தினமும் 1 கிளாஸ் பாகற்காய் ஜூஸ்.. உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏன்..?
கர்ப்பிணிப் பெண்களில் மலச்சிக்கல் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கிறார்கள். பெரும்பாலும் 40 முதல் 50 % கர்ப்பிணிப் பெண்கள் ஒரு கட்டத்தில் மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். பல பெண்கள் இது ஒரு சிறிய பிரச்சனை என்று நினைத்து, அது தானாகவே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கட்டுப்பாடற்ற மலச்சிக்கல் நாளடைவில் பசி, தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும்.
காரணங்கள் என்ன?
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஹார்மோன் மாற்றங்கள் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர் . புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பது செரிமான அமைப்பில் உள்ள தசைகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது உணவு மற்றும் மலம் குடல் வழியாக நகர்வதை மெதுவாக்கி, குடல் இயக்கத்தைக் குறைக்கிறது. வளர்ந்து வரும் கருப்பை குடல்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மலம் கழிப்பதை கடினமாக்குகிறது. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் இந்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க பல பெண்கள் கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். இவையும் மலத்தை கடினமாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்தும் .
இதனால் வயிற்று அசௌகரியம், வீக்கம், மூல நோய் போன்ற பிரச்சினைகள் போன்றவையும் ஏற்பட்டலாம். அப்படி இல்லையென்றால், பதட்டம் மற்றும் தூக்கக் கலக்கத்தையும் ஏற்படுத்தும்.
ALSO READ: குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கலாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய என்ன செய்யலாம்..?
- கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 12 முதல் 15 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது செரிமான அமைப்பை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டு குடல் இயக்கத்தை மேம்படுத்தவும். நடைபயிற்சி அல்லது மகப்பேறுக்கு முற்பட்ட யோகா போன்ற செயல்பாடுகள் குடல் இயக்கத்தைத் தூண்ட உதவும். உணவுக்கு இடையில் அதிக இடைவெளி விடாதீர்கள்.