Weight Loss: புத்தாண்டு முதல் உடல் எடையை குறைக்க திட்டமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

Weight Loss Journey: நீங்கள் எடை குறைக்க விரும்பினால், உடற்பயிற்சியுடன் கூடுதலாக உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. கொழுப்பைக் குறைக்க ஒரு விதியைப் பின்பற்றுவது முக்கியம். நீங்கள் அடிக்கடி சிறிய அளவிலான உணவை உண்ண வேண்டும்.

Weight Loss: புத்தாண்டு முதல் உடல் எடையை குறைக்க திட்டமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

எடையை குறைக்க செய்ய வேண்டியவை!

Published: 

31 Dec 2025 15:54 PM

 IST

2026 புத்தாண்டு (New Year 2026) வந்துவிட்டது. பலரும் புதிய ஆண்டின் முதல் நாள் முதல் உடல் எடையை (Weight Loss) குறைக்க வேண்டும் என்று தீர்மானங்களை எடுக்கிறார்கள். அதன்படி, எடை குறைக்க வேண்டும் என்று புத்தாண்டு முதல் திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் சில விஷயங்களை மனதில் கொள்வது முக்கியம். இல்லையெனில், சில அறியாத தவறுகளால் பிரச்சனை அதிகரிக்கும். நீங்கள் எடை குறைக்க விரும்பினால், உடற்பயிற்சியுடன் கூடுதலாக உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. கொழுப்பைக் குறைக்க ஒரு விதியைப் பின்பற்றுவது முக்கியம். நீங்கள் அடிக்கடி சிறிய அளவிலான உணவை உண்ண வேண்டும். ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உண்ணக்கூடாது.

உடற்பயிற்சி:

நீங்கள் எடை குறைக்க விரும்பினால், நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம். மேலும் இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, இரவு உணவை மாலை நேரத்திலேயே எடுத்து கொள்ள வேண்டும். இரவில் அதிகமாக சாப்பிட்டாலும் கூட அஜீரணம் ஏற்படலாம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ALSO READ: காலை உணவை தவிர்க்கிறீர்களா..? சர்க்கரை நோய் வருமா?

மிகவும் அவசியமானதை தவிர, இரவில் மிகவும் தாமதமாக முழிக்கும் பழக்கத்தை கொள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் இரவில் மிகவும் தாமதமாக விழிக்கும்போது உங்களுக்கு பசி எடுக்கும். மேலும் அந்தப் பசி உணர்வு அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். எண்ணெய், காரமான உணவுகள், வறுத்த உணவுகள், தெரு உணவு, துரித உணவுகளைத் தவிர்க்கும்போது, உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உங்கள் தினசரி மெனுவில் எளிய வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ளுங்கள்.

க்ராஷ் டயட்:

உங்கள் அன்றாட வாழ்வில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். அதைக் குறைப்பதன் மூலம் தொடங்கவும். பின்னர் அதை முற்றிலுமாக நிறுத்துங்கள். சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும்போது, உங்கள் எடை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் இருக்கும். இருப்பினும், எடையைக் குறைக்க ஒருபோதும் க்ராஷ் டயட்டைப் பின்பற்ற வேண்டாம். அதாவது திடீரென்று எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இது உடலில் பல விஷயங்களில் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

ALSO READ: சர்க்கரை நோய்க்கு பயம் கொடுக்கும்.. இந்த 4 உணவு பொருட்கள் போதும்!

கொழுப்பைக் குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இருப்பினும், உங்கள் உடல் திறனுக்கு அப்பாற்பட்ட அதீத உடற்பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள். இது அதிகப்படியான உடல் உளைச்சலை கொடுக்கும்.

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..