Women’s Health: பெண்களே உஷார்! தொப்புளில் அடிக்கடி வலியா? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்!
Navel pain: பெண்கள் ஒரு சிலருக்கு அடிக்கடி தொப்புளில் வலியை சந்திக்கிறார்கள். பலர் இதை சாதாரண அல்லது மாதவிடாய் வலி (Menstrual pain) என்று புறக்கணிக்கிறார்கள். ஆனால் அது எப்போதும் இப்படியான வலியாக இருக்காது. இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம்.

தொப்புளில் ஏன் வலி ஏற்படுகிறது?
இன்றைய நவீன வாழ்க்கையில் மக்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. அதன்படி, நமது ஆரோக்கியத்தில் (Health) சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இதில், அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள் சிலருக்கு அடிக்கடி தொப்புளில் வலியை சந்திக்கிறார்கள். பலர் இதை சாதாரண அல்லது மாதவிடாய் வலி (Menstrual pain) என்று புறக்கணிக்கிறார்கள். ஆனால் அது எப்போதும் இப்படியான வலியாக இருக்காது. இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் தொப்புளைச் சுற்றியுள்ள வலி ஏதோ ஒரு நோயைக் குறிக்கும். எனவே இது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ALSO READ: பெண்களின் கருவுறாமைக்கான ஆபத்து காரணிகள்.. இப்படியான உணவுகளை நிறுத்துங்கள்!
அது ஏன் வலிக்கிறது?
வாயு, செரிமான பிரச்சனைகள்:
தொப்பிளில் வலி ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணம் வயிற்று பிரச்சனைகள் ஆகும். வாயுவினால் ஏற்படும் வலி பெரும்பாலும் உணவுக்கு முன் அல்லது பின் ஏற்படும். இந்த வலி சிறிது நேரம் நீடித்து, பின்னர் காணாமல் போய்விடும். மற்ற வயிற்று பிரச்சனைகளும் தொப்புளில் வலியை ஏற்படுத்தும். இருப்பினும், வலி நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்தால், இதை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
எண்டோமெட்ரியோசிஸ்:
தொப்புளைச் சுற்றியும் எண்டோமெட்ரியோசிஸ் ஏற்படலாம். இந்த நிலையில், கருப்பையின் புறணி போன்ற செல்கள் உடலின் மற்ற பகுதிகளில் வளரத் தொடங்குகின்றன. இந்த செல்கள் சில நேரங்களில் குடல் அல்லது வயிற்றுச் சுவர்களுக்கு செல்லும். அப்போது தொப்புளைச் சுற்றி வலி உருவாகத் தொடங்குகிறது. மாதவிடாயின் போது இந்த வலி இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கருப்பை பிரச்சினைகள்:
தொப்புளில் ஏற்படும் வலி சில நேரங்களில் கருப்பையில் நீர்க்கட்டி அல்லது வேறு எந்த வகையான வீக்கத்தாலும் ஏற்படலாம். ஒரு பெண்ணுக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால், அவருக்கு தொப்புளின் ஒரு பக்கத்தில் வலி இருக்கும். இது சில நேரங்களில் சோர்வு மற்றும் பலவீனத்தையும் ஏற்படுத்தும்.
ALSO READ: பெண்களுக்கு வெள்ளைப்படுதலின்போது இந்த பிரச்சனையா? டாக்டரை உடனே பாருங்க!
இடுப்பு அழற்சி நோய்:
இடுப்பு அழற்சி நோய் காரணமாக தொற்று கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் அல்லது கருப்பைகள் வரை பரவும்போது தொப்புளைச் சுற்றியுள்ள வலி ஏற்படலாம். இதில் காய்ச்சல், வலி அல்லது பிற அறிகுறிகளும் தோன்றலாம்.
தொப்புளுக்கு அருகில் வீக்கம்:
தொப்புளுக்கு அருகில் வீக்கம் இருந்தால், இது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது குடல் பிரச்சனைகளால் ஏற்படுகிறது.
இருப்பினும், நீங்கள் அடிக்கடி தொப்புள் வலியால் அவதிப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.