Health Tips: எஃகு பாத்திரங்களில் இந்த உணவுகளை வைக்கிறீர்களா..? இது வயிற்று பிரச்சனையை உண்டாக்கலாம்!
Steel Containers Store Ideas: சில சமைத்த மற்றும் பிற உணவுப் பொருட்களில் எஃகுடன் வினைபுரியம்.இந்த உணவுகளுக்கும் எஃகு கொள்கலனுக்கும் இடையில் ஒரு வேதியியல் எதிர்வினை ஏற்படலாம். இது சுவையை கெடுப்பது மட்டுமின்றி, உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் ஏற்படுத்தும். தொடர்ந்து, இது ஃபுட் பாய்சன் அல்லது பிற வயிற்று பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

எஃகு பாத்திரங்கள்
எஃகு பாத்திரங்கள் மற்றும் எஃகு டிபன்களில் (Steel Containers) உணவை போட்டு வைப்பதற்கு பெண்களுக்கு மிகவும் விரும்பப்படும் கொள்கலன்களாகும். இதற்கு முக்கிய காரணம் எஃகு பாத்திரங்கள் நீடித்த தன்மை கொண்டவை. மேலும், இதை சுத்தம் செய்ய எளிதானவை. ஆனால் சில உணவுகளை எஃகு கொள்கலன்களில் சேமித்து வைப்பது ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? எஃகு கொள்கலன்களில் சேமித்து வைப்பது அவற்றின் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் (Healthy) தீங்கு விளைவிக்கும்.
சில சமைத்த மற்றும் பிற உணவுப் பொருட்களில் எஃகுடன் வினைபுரியம்.இந்த உணவுகளுக்கும் எஃகு கொள்கலனுக்கும் இடையில் ஒரு வேதியியல் எதிர்வினை ஏற்படலாம். இது சுவையை கெடுப்பது மட்டுமின்றி, உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் ஏற்படுத்தும். தொடர்ந்து, இது ஃபுட் பாய்சன் அல்லது பிற வயிற்று பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, எந்த உணவுகளை எஃகு கொள்கலன்களில் ஒருபோதும் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தினமும் இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்.. கண்களின் பார்வை திறன் கூடும்!
பழங்கள்:
பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.மேலும் இவற்றை முறையாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியம். எஃகு கொள்கலன்களில் பழங்களை போட்டு வைப்பது அவை விரைவாக கெட்டுப்போக உதவி செய்து, சுவையையும் கெடுக்கும். அதாவது, எஃகு கொள்கலன்கள் பழங்களில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இதனால் இவை விரைவாக அழுகிவிடும். காற்று புகாத கண்ணாடி கொள்கலன்கள்தான் பழங்களை போட்டு வைப்பதற்கு சிறந்த வழியாகும். இது தவிர, பிளாஸ்டிக் கொள்கலன்களிலும் பழங்களை போட்டு வைக்கலாம். இது பழங்களை நீண்ட காலம் ப்ரஸாக வைக்க உதவி செய்யும்.
ஊறுகாய்:
ஊறுகாய் ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடிய முக்கியமான பொருளாகும். இவை பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு வைத்துதான் சுவைக்கப்படுகிறது. ஊறுகாயில் இயற்கை அமிலங்கள் உள்ளன. இவை எஃகுடன் வேதியியல் ரீதியாக வினைபுரியும். இவை நாளடைவில் எஃகு கொள்கலனை அரிப்பது மட்டுமல்லாமல் ஊறுகாயின் சுவையையும் கெடுக்கும். சில நேரங்களில், வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எப்போதும் கண்ணாடி கொள்கலன்களில் ஊறுகாயை சேமிக்கவும்.
ALSO READ: வாழைப்பழம் சாப்பிட இதுவே சிறந்த நேரம்.. மருத்துவர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!
தயிர்:
தயிர் நமது ஆரோக்கியத்திற்கு வயிறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் தயிரை எஃகு பாத்திரங்களில் சேமிப்பது நல்லதல்ல. தயிரில் எஃகுடன் எதிர்மறையாக வினைபுரியும் சில கூறுகள் உள்ளன. இவை தயிரின் சுவையை கெடுத்து விரைவாக கெட்டுவிடும். மேலும், தயிரை எஃகு பாத்திரங்களில் சேமித்து வைப்பது நொதித்தல் செயல்முறையை விரைவுபடுத்தி, நுகர்வுக்கு தகுதியற்றதாக மாற்றும். எனவே, தயிரை எப்போதும் கண்ணாடி அல்லது மண் பாத்திரங்களில் எடுத்து வைப்பது நல்லது.