Health Tips: இரவில் அடிக்கடி வாய் வறட்சி ஏற்படுகிறதா? இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!
Dry mouth: தண்ணீர் பற்றாக்குறை, வாயைத் திறந்து தூங்குவது, அதிகமாக காபி அல்லது மது அருந்துவது, சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வாய் வறட்சி ஏற்படலாம். வாய் மீண்டும் மீண்டும் வறண்டு இருக்கும்போது, அது துர்நாற்றம், புண்கள் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இப்போதெல்லாம், மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் உடலில் வெளிப்பட தொடங்கும். இதைப் பலரும் எளிதாக புறக்கணித்து நாளடைவில் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதில், ஒன்று பலருக்கும் இரவில் மீண்டும் மீண்டும் வாய் வறட்சி (Dry mouth) ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக, இது ஜெரோஸ்டோமியா என்று அழைக்கப்படுகிறது. வாயில் குறைந்த உமிழ்நீர் (Saliva) உற்பத்தி வாயை ஒட்டும் தன்மையுடையதாக ஆக்குகிறது. இதனால் வாய் விரைவாக வறண்டு போகிறது. பொதுவாக தூக்கத்தின் போது உமிழ்நீர் சுரக்கும், ஆனால் உங்களுக்கு சுரப்பதற்கு பதிலாக வாய் வறட்சி பிரச்சனை தொடர்ந்தால், அது கடுமையான நோய்க்கு வழிவகுக்கும்.
ALSO READ: எந்த காலத்தில் எந்த பானையில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும்..? இது இவ்வளவு நன்மைகளை தரும்!
இது என்ன பிரச்சனை..?
இது தண்ணீர் பற்றாக்குறை, வாயைத் திறந்து தூங்குவது, அதிகமாக காபி அல்லது மது அருந்துவது, சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். வாய் மீண்டும் மீண்டும் வறண்டு இருக்கும்போது, அது துர்நாற்றம், புண்கள் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் வறண்ட வாய்டன் பிற அறிகுறிகளும் ஏற்படலாம். இரவில் அடிக்கடி வாய் வறட்சி ஏற்பட்டால், அது ஏதோ ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:




- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி வாய் வறட்சி ஏற்படுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. இது வாய் வறட்சியை ஏற்படுத்தும்.
- தைராய்டு பிரச்சனைகள் அடிக்கடி வாய் வறட்சியை ஏற்படுத்தும்.
- தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் வாயைத் திறந்து கொண்டு தூங்குவார்கள். இதனால் அடிக்கடி வாய் வறட்சி ஏற்படும்.
- ஸ்ஜோகிரென்ஸ் நோய்க்குறி போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கின்றன. இது வாய் வறட்சிக்கு வழிவகுக்கும்.
சளி பிடித்தாலும் ஒவ்வாமை அல்லது பிற தொற்றுகளின் போதும் வாய் வறட்சி ஏற்படலாம். - ஆண்டிஹிஸ்டமின்கள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்வதாலும் வாய் வறட்சி ஏற்படலாம்.
ALSO READ: வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது..? பிரபல பல் மருத்துவர் ஜனனி ஜெயபால் விளக்கம்!
வாய் வறட்சி வராமல் தடுப்பது எப்படி..?
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூலம் வாய் வறட்சியை சரிசெய்யலாம்.
- தூங்க செல்வதற்கு முன் மதுபானம் மற்றும் காஃபின் போன்றவற்றை தவிர்க்கவும்.
- வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை பழகி கொள்ளுங்கள்.
- உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்தால், சுகாதார நிபுணர் ஆலோசனையைப் பெறவது நல்லது.