Health Tips: உங்களுக்கு தூசியால் அலர்ஜியா..? வீட்டை சுத்தம் செய்யும் முன் செய்ய வேண்டியவை!
Dust allergy: நீங்கள் டஸ்ட் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தால் இதன் முதல் அறிகுறிகளில் தொடர்ந்து தும்மல் வருவது அடங்கும். சுத்தம் செய்யும் போது மூக்கில் நீர் வடிதல் அல்லது மூக்கில் அடைப்பு ஏற்படலாம். ஒவ்வாமை சில நேரங்களில் கண்களில் சிவத்தல் மற்றும் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம்.

தூசி அலற்ஜி
சுத்தம் என்பது நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய நல்ல விஷயம். வீட்டில் தூசி படிந்தாலோ (Home Cleaning) அல்லது வீட்டின் பளபளப்பு மங்கினாலோ, வீட்டின் முழு சூழலும் மாறுகிறது. இதன் காரணமாக வீடுகளை சுத்தம் செய்கிறோம். சுத்தம் செய்வது சில நேரங்களில் கடினமான பணியாக மாறும், ஏனெனில் ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரிய பிரச்சனையாக மாறும். அதாவது, சிலருக்கு தூசிப் பூச்சிகளால் ஒவ்வாமை (Allergies) பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். இத்தகையவர்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?
என்ன பிரச்சினைகள் ஏற்படலாம்?
தூசியில் காணப்படும் சிறிய பூச்சிகளான தூசிப் பூச்சிகளால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும். இவை பெருமாலும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல்களில் செழித்து வளரும். மேலும், இவற்றின் கழிவுகள் உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை அதிகரிக்கக்கூடும். WHO மற்றும் AIIMS வெளியிட்ட அறிக்கைகளின்படி, இந்தியாவில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பேர் தூசி மற்றும் தூசிப் பூச்சிகளால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
அறிகுறிகள் என்ன?
நீங்கள் டஸ்ட் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தால் இதன் முதல் அறிகுறிகளில் தொடர்ந்து தும்மல் வருவது அடங்கும். சுத்தம் செய்யும் போது மூக்கில் நீர் வடிதல் அல்லது மூக்கில் அடைப்பு ஏற்படலாம். ஒவ்வாமை சில நேரங்களில் கண்களில் சிவத்தல் மற்றும் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம். இதனுடன், தொண்டை புண் அல்லது அரிப்பு ஏற்படலாம். மேலும், அதிகபட்சமாக சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஆஸ்துமா தாக்குதல் ஏற்படலாம். அதன்படி, நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது அடிக்கடி மூச்சுத் திணறல், கடுமையான இருமல், மார்பு இறுக்கம் அல்லது கண் எரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது. இதைப் புறக்கணித்தாள் நாளடைவில் ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ALSO READ: நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?
சுத்தம் செய்யும் போது ஏற்படும் தவறுகள்..
வீட்டை சுத்தம் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பெரும்பாலான மக்கள் துடைக்கும் போது அல்லது துடைக்கும் போது மாஸ்க் அணிவதில்லை. இதன் காரணமாக, தூசி நேரடியாக சுவாசத்தின் மூலம் உடலில் நுழைந்து ஒவ்வாமை தாக்குதல்களை ஏற்படுத்தும். பழைய புத்தகங்களிலிருந்தும், துணிகளிலிருந்தும், ஸ்டோர்ரூம் அல்லது அலமாரியிலிருந்தும் தூசி பறக்கிறது. இந்த தூசி ஒவ்வாமை நோயாளிகளுக்கு ஒரு முக்கிய தூண்டுதலாகும். எனவே, வீட்டை சுத்தம் செய்யும்போது முடிந்தளவு மாஸ்க் அல்லது துணியை மூக்கில் கட்டிக்கொள்வது பாதுகாப்பானது.