Health Tips: பருவ மாற்றத்தினால் அதிகரிக்கும் காய்ச்சல்.. பாராசிட்டமாலும், டோலோவும் ஏன் வேலை செய்வதில்லை..?
Understanding Paracetamol 650: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியாவில் பல பொதுவான நோய்களுக்கு டோலோ 650 ஒரு சிகிச்சையாக மாறியுள்ளது. காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் மருத்துவரை அணுகாமல் டோலோவை உட்கொள்கிறார்கள். டோலோவை உட்கொள்வது பிரச்சினையை தீர்க்கக்கூடும் என்றாலும், அது பல கடுமையான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

காய்ச்சல்
குருகிராமை சேர்ந்த ஐடி ஊழியரான 36 வயதான நீரஜ், 2025 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் அளவில் அதிக காய்ச்சலை எதிர்கொண்டுள்ளார். இவர் மருத்துவரிடம் சென்றபோது 5 நாட்களுக்கு 1 நாளைக்கு 3 வேளை என மொத்தம் 15 டோலோ 650 மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களை கடந்தும் இவருக்கு காய்ச்சல் குறைந்ததாக தெரியவில்லை. 3வது நாளில் நீரஜ் மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது அதே டோலோ 650 (Dolo) உடன் வீக்கம் மற்றும் வலியை போக்க SOS மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். இதன்பிறகு, 4வது நாளில் அவரது வெப்பநிலை குறைய தொடங்கியது. நீரஜை போலவே இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த பருவகாலத்தில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு நீண்ட காலமாக பாராசிட்டமாலும் (Paracetamol) , டோலோ 650 ஐயும் வழங்கப்படுகிறது. ஆனால், இதை பயன்படுத்தியும் காய்ச்சல் குறைவதில்லை, மாறாக நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தொற்றுகளின் மாறிவரும் தன்மை மற்றும் நோயாளிகள் மருந்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ALSO READ: தலைவலியுடன் இந்த 5 அறிகுறிகளா..? உடனடியாக மருத்துவரை நாடுங்கள்..!
அதிக தீவிரம் கொண்ட வைரஸ்கள்:
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியாவில் பல பொதுவான நோய்களுக்கு டோலோ 650 ஒரு சிகிச்சையாக மாறியுள்ளது. காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் மருத்துவரை அணுகாமல் டோலோவை உட்கொள்கிறார்கள். டோலோவை உட்கொள்வது பிரச்சினையை தீர்க்கக்கூடும் என்றாலும், அது பல கடுமையான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. இந்தநிலையில், பருவமாற்றத்தின்போது ஏற்படும் தொற்றுநோய் குறித்தும், மருந்துகளின் தாக்கம் குறித்தும் புது டெல்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் அவசரகால டாக்டர் பிரசாந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். அதில், ”மழைக்காக பருவத்தில் பரவும் சில வைரஸ் தொற்றுகள் அதிக தீவிரத்தையும் நிலைத்தன்மையையும் காட்டுகின்றன.
அதன்படி, இதன்மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த டோலோ 650 போன்ற மருந்துகள் எப்போதும் போதுமானதாக இருக்காது. உடலில் நீரிழப்பு, துரித உணவுகளை எடுத்துகொள்ளுதல், ஊட்டச்சத்து இல்லாமை போன்றவை பாராசிட்டமால் விளைவை மழுங்கடிக்கும். ஒவ்வொரு காய்ச்சலும் வைரஸ் காய்ச்சலால் மட்டும் ஏற்படுவதில்லை. டெங்கு காய்ச்சல், பாக்டீரியா தொற்றுகள் அல்லது டைபாய்டு போன்ற பிரச்சனைகளுக்கு பாராசிட்டமால் மட்டுமே எடுத்துகொள்வது வெப்பநிலையை குறைக்காது.” என்றார்.
ALSO READ: கிரீன் டீயின் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
தொடர்ந்து, வெல்னஸ் ஹோம் கிளினிக் மற்றும் ஸ்லீப் சென்டரின் இயக்குநரான நுரையீரல் நிபுணர் டாக்டர் விகாஸ் மிட்டலும் இதுகுறித்து கூறுகையில், “பாராசிட்டமால் மூளையில் உடல் வெப்பநிலையின் நிர்ணயிக்கப்பட்ட புள்ளியை குறைக்கிறது. இதனால், ஆக்கிரமிப்பு வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் உயர் தர அல்லது தொடர்ச்சியான காய்ச்சல்களை ஓரளவு மட்டுமே குறைக்க முடியும்” என்று தெரிவித்தார்.