ஒற்றைத் தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதா? தடுப்பது எப்படி?

Headache Health Check: சிலருக்கு தொடர்ச்சியான தலைவலி ஏற்படுவது வழக்கமாக இருக்கும். அது ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம். ஒற்றைத் தலைவலி சில அலர்ஜியின் காரணமாக ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள் என்ன? அவற்ற தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒற்றைத் தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதா? தடுப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

01 Aug 2025 23:45 PM

தலைவலி (Headache) என்பது ஒரு பொதுவான விஷயம். ஆனால் இந்த வலி குறிப்பிட்ட நேரங்களில் மீண்டும் மீண்டும் வந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது ஒவ்வொரு முறையும் சாதாரண தலைவலியாக இருக்காது. தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான வலி மற்றும் சில நேரங்களில் குமட்டல், வாந்தி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்தால் அது ஒற்றைத் தலைவலியாக (Migraine) இருக்கலாம். இது எந்த வயதிலும் வரலாம். ஆண்களை விட பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் சாதாரண தலைவலியிலிருந்து வேறுபட்டவை. இது பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இது சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொடங்குவதற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும். மற்றவர்களுக்கு திடீரென கடுமையான வலி ஏற்படுகிறது.

ஒற்றைத் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்

  • தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான வலி
  • ஒளி, உரத்த சத்தம் அல்லது வாசனையால் எரிச்சல்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • சோர்வு அல்லது தலைச்சுற்றல்
  • கழுத்தில் கனத்தன்மை
  • பேசுவதில் அல்லது யோசிப்பதில் சிரமம்.

இதையும் படிக்க : தினமும் காலையில் எழுந்தவுடன் தலைவலி தொல்லையா..? இதுதான் காரணம்..!

ஒற்றைத் தலைவலி வலி ஏன் ஏற்படுகிறது?

ஒற்றைத் தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், சமநிலையற்ற வழக்கங்கள், வெறும் வயிற்றில் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், சாக்லேட், சீஸ் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற சில உணவுகள், வானிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிகப்படியான காஃபின் அல்லது திரை நேரம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.

ஒற்றைத் தலைவலியைத் தடுப்பதற்கான வழிகள்

  • சரியான நேரம் தூங்குவது மிகவும் அவசியம்
  • பசியுடன் இருக்காதீர்கள். சரியான நேரத்தில் சமச்சீரான உணவை உண்ணுங்கள்
  • ஸ்கிரீன் டைமை குறைத்து புத்தகம் வாசிப்பு போன்றவற்றை செய்யலாம்.
  • அதிக விளக்குகள் அல்லது மோசமான துர்நாற்றம் வீசும் இடங்களை தவிர்க்கவும்
  • யோகா, பிராணயாமா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும்
  • வலி தொடங்கியவுடன் அமைதியான, இருண்ட அறையில் ஓய்வெடுங்கள்
  • சிலர் தலையில் ஐஸ் கட்டியை வைப்பதன் மூலம் நிவாரணம் பெறுகிறார்கள்
  • சாக்லேட், சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காஃபின் போன்ற ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்கவும்.

இதையும் படிக்க : நீண்ட நாட்களாக கை நடுக்க பிரச்சனையா..? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!

எப்போது பரிசோதிக்கப்பட வேண்டும்?

ஒற்றைத் தலைவலி மீண்டும் மீண்டும் வந்தால், வீட்டு வைத்தியம் நிவாரணம் அளிக்கவில்லை என்றால், அல்லது பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம், உணர்வின்மை அல்லது மயக்கம் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒற்றைத் தலைவலியை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் சரியான நேரத்தில் அவற்றைக் கண்டறிந்து தடுப்பதன் மூலம் அவற்றின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க முடியும்.