Health Tips: அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா..? இவ்வளவு ரிஸ்க் இருக்கு..!

Drinking Too Much Water: கோடை காலத்தில் அதிக நீர் அருந்துவது நல்லது என்றாலும், அதிகப்படியான நீர் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பாதித்து, சிறுநீரகப் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு, ஹைபோநெட்ரீமியா போன்றவற்றை ஏற்படுத்தும். இரத்தத்தில் சோடியம் அளவு குறைந்து மூளை வீக்கம், வாந்தி போன்றவையும் ஏற்படலாம். போதுமான அளவு நீர் அருந்துவது அவசியம் என்றாலும், அதிகப்படியான நீர் அருந்துவதால் தூக்கமின்மை, இதய அழுத்தம், செரிமானப் பிரச்சினைகள் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Health Tips: அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா..? இவ்வளவு ரிஸ்க் இருக்கு..!

தண்ணீர் குடித்தல்

Published: 

17 May 2025 22:02 PM

கோடை காலத்தில் (Summer) தண்ணீரை எவ்வளவு எடுத்துக்கொள்கிறமோ, அவ்வளவு நல்லது. தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக தண்ணீர் (Water) குடிப்பதும் உடலில் பிரச்சனையை விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தவகையில், அதிகமாக தண்ணீர் குடிப்பதும் உடலில் சில பிரச்சனைகளை உண்டாக்கும். பொதுவாக, நமது சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி உடலில் இருந்து கழிவுகளை சிறுநீர் (Urine) மூலம் வெளியேற்றும். அதேநேரத்தில், நாம் அதிகமாக தண்ணீர் எடுத்து கொள்ளும்போது, ​​இதை செய்து முடிக்க சிறுநீரகங்கள் கடினமாக உழைப்பை போட வேண்டும். இது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்து, அதன் செயல்பாட்டை பாதிக்க செய்யும்.

உடலின் வழக்கமான வேலைக்கு சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் மிகவும் முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் லேசாக தொடங்கும். இதனால், உடலில் அவ்வப்போது தசைப்பிடிப்பு, பலவீனம் மற்றும் திடீர் குழப்பம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அதேபோல், அதிகமாக தண்ணீரை எடுத்துக்கொள்ளும்போது இரத்தத்தில் சோடியம் அளவை வெகுவாகக் குறைத்து ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்தும். இதனால் மூளையில் வீக்கம், வாந்தி மற்றும் வலிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். நிலை தீவிரம் அடைந்தால் நிலைமை மோசமாகி நோயாளி கோமா ஸ்டேஜூக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சிறுநீர் கழிக்க செய்யும். இது உங்கள் அன்றாட வழக்கத்தை பாதித்து, தூக்கத்தை எடுக்கும். அதாவது, அதிகமாக தண்ணீர் குடிப்பதால் இரவில் அடிக்கடி பாத்ரூம் செல்ல நேரிட்டு, உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம். இதன் காரணமாக மறுநாள் நீங்கள் சோர்வடைய செய்யும். தண்ணீர் குடிக்கும்போது, ​​இரத்த அளவு அதிகரிக்கிறது. இது இதயத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தி, இதயம் பம்ப் செய்ய அதிக சக்தியை கொடுக்க வேண்டியாகி இருக்கும். இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால், கைகள், விரல்கள் அல்லது கால்களில் வீக்கம் இருந்தால், அது அதிகமாக தண்ணீர் குடிப்பதன் அறிகுறியாக இருக்கலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் இருக்கும் அமிலம் நீர்த்துப்போகச்செய்யும். இதனால், செரிமான சக்தி பலவீனமடைந்து வாயுத்தொல்லை முதல் அஜீரணம் வரை பல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், அதிகபடியான தண்ணீர் உணவில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உடலை பலவீனமடைய செய்யும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது..?

குறிப்பிட்ட வயதை எட்டியவர்கள் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை எடுத்துக்கொள்ளலாம். அதாவது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளலாம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா இல்லையா என்பதை அறிய உங்கள் சிறுநீரின் நிறத்தைவைத்து அறிந்து கொள்ளலாம். வெளிர் மஞ்சள் நிற சிறுநீர் உங்களுக்கு நல்ல நீர்ச்சத்து இருக்கிறது என்று அர்த்தம். அதே நேரத்தில், சிறுநீரின் அடர் மஞ்சள் நிறம் நீரிழப்பு என்பதை உணர்த்தும். எனவே, போதுமான அளவு தண்ணீர் எடுத்துகொள்ள வேண்டும்.