Tight Underwear Effects: இறுக்கமாக உள்ளாடைகள் அணிவது சரியா..? பிரபல மருத்துவர் முருகசுந்தரம் விளக்கம்!
Side Effects of Tight Underwer: இன்றைய நவீன காலத்தில் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறுக்கமான ஆடைகளை அணிவது தங்களை ஸ்டைலாகவும், ஃபிட்டாகவும் காட்ட மக்கள் நினைக்கிறார்கள். உள்ளாடை இறுக்கமாக இருந்தால், அது ஆண்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

மருத்துவர் முருகசுந்தரம் - மருத்துவர் சந்தோஷ் ஜேகப்
உள்ளாடை அணிவது மிகவும் தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். தளர்வான அல்லது இறுக்கமான உள்ளாடைகளுக்கான (Tight Underwear) தேவைகளும் விருப்பங்களும் மாறுபடும். இருப்பினும், சுகாதார கண்ணோட்டத்தில் மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இன்றைய நவீன காலத்தில் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறுக்கமான ஆடைகளை அணிவது தங்களை ஸ்டைலாகவும், ஃபிட்டாகவும் காட்ட மக்கள் நினைக்கிறார்கள். உள்ளாடை இறுக்கமாக இருந்தால், அது ஆண்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். ஆண்மைக்கு மட்டுமின்றி, பல வகையான தொற்றுநோய்களில் (Infection) அபாயமும் அதிகரிக்கிறது. இந்தநிலையில், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப் மற்றும் மருத்துவர் முருகசுந்தரம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ALSO READ: மாரடைப்பு வந்தால் CPR கொடுப்பது எப்படி..? மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி விளக்கம்!
இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது விதைப்பையின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. லேப்டாப் மடியில் வைத்து வேலை செய்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவது போல, இறுக்கமான உள்ளாடைகளும் விந்தணு உற்பத்தியை குறைக்கும்.
- இறுக்கமான உள்ளாடைகளும் சருமத்திற்கு மோசமானவையாகும். தோலை அதிகமாக தேய்ப்பது இடுப்பு, தொடைகளில் எரிச்சல் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும். இது தோல் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.
- உடற்பயிற்சி மற்றும் பிற காரணங்களுக்காக வியர்வை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் உள்ளாடைகளை தேர்வு செய்யாமல், அதற்கு பதிலாக இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால், வியர்வை உங்கள் பிறப்புறுப்புகளில் நுழையும் அபாயம் உள்ளது. இது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- இறுக்கமான உள்ளாடைகள் ஆண்குறியில் வலி, எரிதல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
ALSO READ: சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்! வராமல் தடுக்க உதவும் குறிப்புகள்..!
சரியான உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி..?
- உங்கள் உள்ளாடை அளவை தேர்தெடுக்கும்போது, எப்போதும் ஒரு அளவு பெரியதாகவும், வசதியாகவும், மிகவும் இறுக்கமாகவும் இல்லாத உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கவும்.
- வியர்வையால் ஏற்படும் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய இயற்கை துணிகளை எப்போதும் தேர்வு செய்யவும்.
- இரவு நேரங்களில் முடிந்தவரை உள்ளாடை அணிவதை தவிர்த்து, கைலிகள், நைட்டிகள், நைட் டிரஸ் போன்ற காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
- உள்ளாடைகளின் சுகாதாரத்தை எப்போதும் கவனித்து கொள்ளுங்கள். பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்க ஒவ்வொரு நாளும் சுத்தமான உள்ளாடைகளை மாற்றவும்.
- தோல் வெடிப்புகள் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளின் போது ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் உள்ளாடைகளை தேர்வு செய்யவும்.