Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pregnancy: நார்மல் டெலிவரி ஆக வேண்டுமா..? டாக்டர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!

Normal Delivery Tips: நார்மல் டெலிவரி வலியை தாங்குவது எளிதல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே, ஆபரேஷன் என்னும் சி-பிரிவு பிரசவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது டெலிவரி நேரத்தில் பெரியளவில் வலியை கொடுக்கவில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒரு சில வலியை கொடுக்கலாம்.

Pregnancy: நார்மல் டெலிவரி ஆக வேண்டுமா..? டாக்டர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!
மருத்துவர் சரண் ஜேசிImage Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Nov 2025 21:26 PM IST

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கும் பொதுவாகவே ஹார்மோன் மாற்றங்கள், மூட் ஸ்விங் போன்றவை ஏற்படும். அந்தவகையில், கர்ப்ப காலத்தில் (Pregnancy) ஒவ்வொரு பெண்ணும் நார்மல் டெலிவரி மூலம் குழந்தையை பெற்றுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், நார்மல் டெலிவரி (Normal Delivery) வலியை தாங்குவது எளிதல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே, ஆபரேஷன் என்னும் சி-பிரிவு பிரசவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது டெலிவரி நேரத்தில் பெரியளவில் வலியை கொடுக்கவில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒரு சில வலியை கொடுக்கலாம். மேலும், அடுத்த முறை நீங்கள் குழந்தையையும் பெற முயற்சிக்கும்போதும் சி – பிரிவையே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். இந்தநிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு நார்மல் டெலிவரியாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து மருத்துவர் சரண் ஜேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்..? மருத்துவர் நான்சி அட்வைஸ்..!

நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி:

 

View this post on Instagram

 

A post shared by Dr Charan J C (@drcharanjc)


கர்ப்பிணி பெண்கள் 3வது மாதத்திற்கு பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி, தினமும் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் நடக்கலாம். முதல் 3 மாதங்களுக்கு பிறகு சுறுசுறுப்பாக இருக்கலாம். அதன்படி, வீட்டு வேலைகள் செய்ய தொடங்கலாம். நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்திலிருந்து பட்டர்ஃப்ளை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து, 7.5 முதல் 8 மாதங்களில் ஸ்குவாட், இடுப்பு தள பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

3 மாதத்திற்கு பிறகு தினமும் கர்ப்பிணி பெண்கள் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில் ஆழ்ந்த மூச்சை எடுத்து ஆழமாக வெளிவிடுவது நன்மை பயக்கும். பிரசவத்தின்போது குழந்தையை தள்ள வேண்டியிருக்கும் போது இந்தப் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கிய உணவுகள்:

கர்ப்ப காலத்தில் கனமான உணவு, துரித உணவுகள், அதிக இனிப்புகள், நெய் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். தினமும் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இந்த உணவுகள் பிரசவத்தின் போது உங்களை பிரசவத்திற்குத் தூண்ட உதவும்.

பிறப்புறுப்பில் மசாஜ்:

முதல் 3 மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு, சுத்தமான கைகளை கொண்டு வீடியோவில் காட்டப்படுவது போல் பிறப்புறுப்பில் மசாஜ் செய்யலாம். இது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நார்மல் டெலிவரிக்கு உதவும்.

ALSO READ: கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? மருத்துவர் ஸ்வாதி நேதாஜி டிப்ஸ்!

இடது பக்கம் தூங்குதல்:

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் தூக்க நிலையில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதார நிபுணர்கள் உங்கள் முதுது மற்றும் இடது பக்கம் படுப்பதற்குப் பதிலாக உங்கள் இடது பக்கத்தில் படுக்க பரிந்துரைக்கின்றனர். இந்த நிலை நார்மல் டெலிவரியை உறுதி செய்ய உதவி செய்யும்.