Health Tips: ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்..? மருத்துவர் சரண் ஜேசி அறிவுரை!

Tea Drinking: கோடை காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை டீ குடிக்கலாம். நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், டீயில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது.

Health Tips: ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்..? மருத்துவர் சரண் ஜேசி அறிவுரை!

மருத்துவர் சரண் ஜேசி

Published: 

23 Nov 2025 19:30 PM

 IST

இந்தியாவில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக டீ கருதப்படுகிறது. ஒருவரைச் சந்திக்கும்போதோ அல்லது சில நிமிடங்களை ஒன்றாகச் செலவிடும்போதோ டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் நாளை ஒரு கப் சூடான டீயுடன் (Tea) தொடங்குவார்கள். அன்றைய நாளில் காலையில் எழுந்ததும் டீ குடிக்கவில்லை என்றால் நகரவே நகராது. இருப்பினும், சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை, இரண்டு முறைக்கு பதிலாக நினைக்கும் பொழுதெல்லாம் டீ குடிக்க தொடங்குவார்கள். சிலர் டீயை ஒரு ஆற்றல் பானமாக கருதுகிறார்கள், ஏனென்றால் நாம் கொஞ்சம் சோர்வாக உணரும்போதெல்லாம், டீ நமக்கு நினைவிற்கு வருகிறது. அந்தவகையில், ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம் என்பது குறித்து மருத்துவர் சரண் ஜேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: அந்துருண்டை குழந்தைகளுக்கு இவ்வளவு ஆபத்தானதா? மருத்துவர் அருண்குமார் விளக்கம்!

எத்தனை முறை ஒரு நாளைக்கு டீ குடிக்கலாம்..?


கோடை காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை டீ குடிக்கலாம். நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், டீயில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு 5 முதல் 6 கப் வரை குறைவாக டீ அருந்துபவர்கள் இந்தப் பழக்கத்தை மாற்றி, ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் மட்டுமே குடிக்க வேண்டும்.

ALSO READ: சாப்பிட்ட பிறகும் அடிக்கடி பசிக்கிறதா? காரணம் என்ன? மருத்துவர் சிவசுந்தர் விளக்கம்!

என்ன செய்யலாம்..?

  • ஒரு நாளைக்கு அதிகமாக டீ குடிப்பது சிறுநீரக கற்கள், அமிலத்தன்மை, எலும்பு அடர்த்தியின்மை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • சாப்பிட்டவுடன் கண்டிப்பாக டீ குடிக்கக்கூடாது. இப்படி குடிப்பது சாப்பாட்டில் உள்ள அயர்ன் மற்றும் தாதுக்களை உறிஞ்சிவிடும்.
  • காலையில் எழுத்ததும் வெறும் வயிற்றில் உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றினால், க்ரீன் டீ, இஞ்சி டீ உள்ளிட்ட மற்ற ஆரோக்கிய டீயை குடிக்கலாம்.
  • டீயில் உள்ள காஃபின் உடலில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கும். கார்டிசோல் ஒரு மன அழுத்த ஹார்மோன், மேலும் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, ​​உடல் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகிறது. மதியம் நேரத்தில் டீ குடிப்பது செரிமானத்தை பாதிக்கும். தேநீரில் உள்ள டானின்கள், நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இரும்புச்சத்து குறைபாடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
  • உணவுக்கும் டீக்கும் இடையில் குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு டீ குடிப்பது நல்லது.
TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி