Bloating Remedies: சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கியதாக உணர்வா..? சரிசெய்யும் கிட்சன் பொருட்கள்..!

Home Remedies to Reduce Bloating: வயிறு உப்புசம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதைப் புறக்கணிப்பது நல்லதல்ல. ஒவ்வொரு முறையும் மருந்துகளைப் பயன்படுத்துவதும் சரியான வழி அல்ல. அதனால்தான் இந்த வீட்டு பொருட்களை பயன்படுத்துவது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனே உட்காருவதற்குப் பதிலாக, 10 நிமிடங்கள் நடப்பது கூட நல்ல பலனைத் தரும்.

Bloating Remedies: சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கியதாக உணர்வா..? சரிசெய்யும் கிட்சன் பொருட்கள்..!

வயிறு வீக்கம்

Published: 

27 Sep 2025 15:47 PM

 IST

இன்றைய நவீன காலத்தில் சாப்பிட்ட பிறகு பலரும் வயிறு வீக்கம், வயிறு உப்புசம் (Abdominal Bloating) பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பெரும்பாலும் உப்புசம் காரணமாக வயிறு வீக்கம் போன்ற உணர்வு வரையிலான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். நீங்கள் கொஞ்சம் சாப்பிட்டாலும், உங்கள் உடைகள் இறுக்கமாகி, வாயு (Gas Trouble) வெளியேறுவது போல் உணர தொடங்கினால், கீழ்கண்ட விஷயங்களை தெரிந்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் இதைக் கட்டுப்படுத்த மருந்துகளின் தேவை இல்லை என்று கூறப்படுகிறது.

வீட்டில் கிடைக்கும் சில உணவுகள் மூலம் இந்தப் பிரச்சினையைக் குறைக்கலாம். வீக்கம், வயிற்றில் கனமான உணர்வு ஆகியவை தோன்றும். இது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலையும் குறைக்கிறது. வீக்கத்திற்கு ஒவ்வொரு முறையும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட சமையலறையில் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

ALSO READ: தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. இதை சாப்பிட்டால் கட்டுப்படுத்துவது கடினம்!

சோம்பு, சீரகப் பொடி:

சோம்பு மற்றும் சீரகம் இரண்டும் வயிற்றில் ஏற்படும் வாயு மற்றும் வயிற்று உப்புசத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக அரைக்கவும். உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் இந்தப் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வாயு உருவாவதைத் தடுக்கிறது.

இஞ்சி டீ:

இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடிக்கவும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்து கொண்டால் வயிறு உப்புசம் பிரச்சனை சரியாகும்.

பெருங்காய நீர்:

வாயு பிரச்சனைகளுக்கு பெருங்காயம் ஒரு பழங்கால ஆயுர்வேத தீர்வாகக் கூறப்படுகிறது. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உடனடி நிவாரணம் அளிக்கும்.

புதினா மற்றும் எலுமிச்சை ஜூஸ்:

புதினா மற்றும் எலுமிச்சை இரண்டும் வயிற்றில் உள்ள சூட்டைக் குறைக்கின்றன. இவை செரிமான அமைப்பை மேம்படுத்துகின்றன. புதினா இலைகளின் சாற்றைப் பிழிந்து, அதனுடன் எலுமிச்சை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

ALSO READ: மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா..? இந்த பொருட்கள் வலியை குறைக்கும்!

எலுமிச்சை தண்ணீர்:

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழம் கலந்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இது வயிற்று உப்புசம் பிரச்சனையையும் குறைக்கிறது.

வயிறு உப்புசம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதைப் புறக்கணிப்பது நல்லதல்ல. ஒவ்வொரு முறையும் மருந்துகளைப் பயன்படுத்துவதும் சரியான வழி அல்ல. அதனால்தான் இந்த வீட்டு பொருட்களை பயன்படுத்துவது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனே உட்காருவதற்குப் பதிலாக, 10 நிமிடங்கள் நடப்பது கூட நல்ல பலனைத் தரும்.