Health Tips: தைராய்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்துமா? இது இதய பிரச்சனையையும் உண்டாக்குமா?
Thyroid Problems: தைராய்டு சுரப்பி உடலை சரியாக செயல்பட வைக்க போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாதபோது, ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த மெதுவான செயல்முறை உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது எடை, இரத்த சர்க்கரை, கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

தைராய்டு
உங்கள் கழுத்தின் முன்புறத்தில் உள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி உள்ளது. இது தைராய்டு வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் எடை, ஆற்றல் அளவுகள் மற்றும் இதயத் துடிப்பையும் பாதிக்கிறது. இருப்பினும், வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற நிலைகளில் தைராய்டின் பங்கு பெரும்பாலும் கவனிக்கப்படுவது கிடையாது. உங்கள் தைராய்டை (Thyroid) கவனித்துக்கொள்வது நல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும். வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ள 4 பேரில் ஒருவருக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை இருக்கலாம். அந்தவகையில், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு எடை (Weight Gain) அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: டயட், உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த தவறுகளே காரணம்!
ஹைப்போ தைராய்டிசம் என்றால் என்ன..?
ஹைப்போ தைராய்டிசம் பெரும்பாலும் இரத்த சர்க்கரை, கொழுப்பு, எடை மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் உடலின் திறனை பாதிக்கலாம். 10 பேரில் ஒருவருக்கு ஹைப்போ தைராய்டிசம் உள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறை, மோசமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சியின்மை, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி இரண்டிற்கும் ஆபத்து காரணியை உருவாக்குகின்றன.
தைராய்டு சுரப்பி உடலை சரியாக செயல்பட வைக்க போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாதபோது, ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த மெதுவான செயல்முறை உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது எடை, இரத்த சர்க்கரை, கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் இரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
ஹைப்போ தைராய்டிசம் பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் பெரியளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. எனவே, பெண்கள், ஆண்கள் என தைராய்டை தவறாமல் பரிசோதித்துக் கொள்வது முக்கியம். நீங்கள் இந்தப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வழக்கமான பரிசோதனைகளுக்கு உங்கள் மருத்துவரைச் சந்திப்பது மிகவும் முக்கியம்.
தைராய்டு சுரப்பியைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம்..?
சமச்சீர் உணவு:
நல்ல ஆரோக்கியத்திற்கான முதல் படி சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவை உட்கொள்வது நல்ல தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியம். இந்த ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தைராய்டு செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, சமச்சீர் உணவை உண்ணுங்கள். அதேநேரத்தில், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறைவுற்ற கொழுப்புகள், சோயா சார்ந்த பொருட்கள் மற்றும் இனிப்புகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.
சிகிச்சை நிலைத்தன்மை:
உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி தைராய்டு மருந்து அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றுவது முக்கியம். இதனால் சிகிச்சை சரியான திசையில் தொடரும் மற்றும் உடலில் ஹார்மோன்களின் சமநிலை பராமரிக்கப்படும். உங்கள் மருத்துவரை அணுகாமல் மருந்தை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவில் எந்த மாற்றத்தையும் செய்யவோ வேண்டாம்.
உடற்பயிற்சி:
உங்கள் தினசரி வழக்கத்தில் சுறுசுறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற மிதமான உடற்பயிற்சியைச் சேர்ப்பது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். வழக்கமான உடல் செயல்பாடு வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
ALSO READ: பெண்களிடையே அதிகரிக்கும் PCOS பிரச்சனை.. காரணம் என்ன..?
மன அழுத்தத்தை குறையுங்கள்:
மன அழுத்தம் உங்கள் மனநிலையையும், தைராய்டையும் பாதிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது, கார்டிசோல் அளவுகள் அதிகரிக்கின்றன. இது தைராய்டு செயல்பாட்டையும் பாதிக்கலாம். மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், சிறந்த தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.