Diaper Safety: குழந்தைகள் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா? எவ்வளவு நேரம் அணிய வேண்டும்..?
Diaper Safety for Babies: டயப்பர்கள் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் மிகவும் வசதியானவை என்றாலும், சில நேரங்களில் இது குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதாவது, குழந்தைகளுக்கு அணியப்படும் டயப்பரை நீண்ட நேரம் அல்லது சரியான முறையில் அணியாதபோது பிரச்சனையை தரும்.

டயப்பர்
வேலை செய்யும் தாயாக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு (Child) டயப்பர்களை அணிக்கிறார்கள். இதனால், குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது சுத்தம் செய்வதை தடுக்கிறது. குழந்தை இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது மற்றும் அவரது தூக்கம் தொந்தரவு ஏற்படும்போது, சத்தமாக அழ தொடங்கும். இதனால், தாய் மற்றும் குழந்தையின் தூக்கமும் கெடும். அதன்படி, டயப்பர்கள் (Diaper) குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் மிகவும் வசதியானவை என்றாலும், சில நேரங்களில் இது குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதாவது, குழந்தைகளுக்கு அணியப்படும் டயப்பரை நீண்ட நேரம் அல்லது சரியான முறையில் அணியாதபோது பிரச்சனையை தரும். எனவே, டயப்பர்களை அணிவது குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு டயப்பர்கள் அணிவதால் ஏற்படும் தீமைகள்:
தோல் அலர்ஜி:
டயப்பர்கள் குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். இது குழந்தையின் மென்மையான தோல்களில் தடிப்புகள் மற்றும் தோல் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் டயப்பர்களை அடிக்கடி மாற்றவில்லை என்றால், இவை கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நீண்ட நேரம் அணிதல்:
பல பெற்றோர்கள் தங்கள் சொந்த வசதிக்காக 24 மணி நேரமும் டயப்பர்களை அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது ஒரு பெரிய தவறு. நாள் முழுவதும் டயப்பர்களை அணிவது குழந்தை கழிப்பறை பயிற்சியை தாமதமாகக் கற்றுக்கொள்ள வைக்கிறது.
சிறுநீர் பாதை தொற்று:
நீண்ட நேரம் டயப்பர்களை அணிவது குழந்தைக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், குழந்தைக்கு உணர்திறன் வாய்ந்த பகுதியில் தொற்று ஏற்படுவது பிரச்சனையை உண்டாக்கும். இது குழந்தைக்கு சங்கடத்தை கொடுத்து, தூக்கத்தை கெடுக்கும்.
வயிற்றில் அழுத்தம்:
உங்கள் குழந்தைக்கு நீண்ட நேடம் டயப்பரில் வைத்திருப்பது வயிற்று ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படும். டயப்பர் அணிவது வயிற்றில் நீண்ட நேரம் அழுத்தத்தை கொடுக்கும். இதனால், குழந்தைக்கு மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படுத்தும்.
நடப்பதில் சிரமம்:
தொடர்ந்து டயப்பர்களை அணிவது உங்கள் குழந்தை வசதியாக நடக்கவோ அல்லது தவழ்ந்து செல்லவோ சிரமத்தை கொடுக்கும். இது அவர்களின் அடுத்தக்கட்ட உடல் வளர்ச்சிக்கு தடையாக அமையும்.
டயப்பர்களை எப்போது, எப்படிப் பயன்படுத்துவது?
- பயணம் செய்யும் போது மற்றும் இரவில் தூங்கும் போது போன்ற மிகவும் அவசியமான போது மட்டுமே டயப்பர்களைப் பயன்படுத்துங்கள். இப்படியான தேவைப்படும் நேரத்தில் மட்டுமே டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.
- வீட்டில் இருக்கும்போது நாள் முழுவதும் டயப்பர் அணியாமல் குழந்தையை திறந்த வெளியில் வைத்திருப்பது நல்லது. இது குழந்தையை சௌகரியமாக உணர வைக்கும், மேலும் தொற்று போன்ற பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கும்.
- குழந்தையின் டயப்பரை தவறாமல் மாற்றி, சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ழந்தையின் சருமத்திற்கு சிறிது காற்று கிடைக்கும் வகையில் சிறிது நேரம் டயப்பர் இல்லாமல் வைத்திருங்கள். இது ஈரப்பதத்தை நீக்கி, உங்கள் குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- டயப்பரை தேர்ந்தெடுக்கும்போது, டயப்பர் மென்மையாகவும், ரசாயனம் இல்லாததாகவும் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது குழந்தையின் மென்மையான சருமத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது.