Copper Water Bottle: செம்பு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லதா..? இதை எப்படி பயன்படுத்துவது..?
Copper Water Health Benefits: நவீன வாழ்வில், மக்கள் ஆரோக்கிய விழிப்புணர்வுடன் செம்பு பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். செம்பு நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. ஆனால், அதிகப்படியான செம்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, சரியான பயன்பாடு அவசியம். இந்த கட்டுரை செம்பு பாத்திர பயன்பாடு, நன்மைகள், மற்றும் எச்சரிக்கைகள் குறித்து விளக்குகிறது.

செம்பு வாட்டர் பாட்டில்
நவீன வாழ்க்கையில் மக்கள் உடல்நலம் (Health) குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இதற்காக, எனது அன்றாட வாழ்க்கையில் பலரும் மண்பானை மற்றும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்த தொடங்குகின்றன. பண்டைய காலம் முதல் தமிழ்நாட்டின் சமையலறைகளில் (Tamil Nadu Kitchen) செம்பு பாத்திரம் (Copper Vessel) முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேத முறைப்படி, செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, செம்பு வாட்டர் பாட்டல்கள் ஆபிஸ் முதல் வீடுகள் வரை எல்லா இடங்களிலும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தநிலையில், செம்பு பாத்திரம் பயன்படுத்துவது உண்மையில் நன்மை தருமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
செம்பு பாத்திரம்:
செம்பு பாத்திரத்தில் குடிநீரை சேமித்து வைக்கும் பழக்கம் பண்டைய இந்தியா, எகிப்து காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வடுகிறது. ஆயுர்வேதத்தின்படி, செம்பு நீர் மூலம் தண்ணீர் குடிப்பது வாத, பித்த மற்றும் கப பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும், செம்பு நீர் உடலை நச்சு நீக்குவதற்கும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவியாக கருதப்படுகிறது.
தாமிரம் தண்ணீரில் கரையுமா..?
ஒரு செம்பு பாத்திரத்தி தண்ணீரை ஊற்றி சுமார் 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கும்போது, அதில் இருக்கும் சிறிய செம்பு துகள்கள் அயனிகளாக தண்ணீரில் கரைய தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒலிகோடைனமிக் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வழிக்கும்.
செம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி:
செம்பு பாத்திரத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை உடல் தொற்று மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதபி செய்யும்.
எடை கட்டுப்பாடு:
செம்பு பாத்திரத்தில் வைத்து குடிக்கப்படும் தன்ணீர் எடை கட்டுப்பாட்டிற்கு உதவி செய்யும். இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
தைராய்டு சமநிலை:
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அந்தவகையில், தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு செம்பு அவசியம். இந்த குறைபாட்டை செம்பு சமநிலையுடன் வைக்க உதவி செய்யும்.
செரிமான அமைப்பு:
செம்பு தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும். இது, வயிற்று வீக்கம், புண்கள், அஜீரணம் மற்றும் தொற்று பிரச்சனை உள்ளிட்டவற்றை தடுத்து வயிற்று ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
செம்பு பாட்டிலை எப்படி பயன்படுத்துவது..?
- செம்பு பாட்டிலை சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். குறைந்தது 6 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் வைத்து பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- செம்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க சரியான நேரம் என்பது, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுதான்.
- செம்பு அதிகமாக தண்ணீரில் சேருவதை தவிர்க்க, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது 2 முறை மாற்றலாம்.
- செம்பு பாத்திரங்களில் எலுமிச்சை பழத்தின் சாறு உள்ளிட்டவற்றை சேர்க்கக்கூடாது. இது செம்பு கசிவை பயன்படுத்தும்.