Health Tips: எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் அத்திப்பழங்கள்.. எப்படி எடுத்துக்கொள்வது நல்லது..?

Benefits of Eating Figs: உலர்ந்த அத்திப்பழங்களில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அத்திப்பழங்கள் இனிப்புச் சுவை கொண்டவை என்றாலும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வு.

Health Tips: எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் அத்திப்பழங்கள்.. எப்படி எடுத்துக்கொள்வது நல்லது..?

அத்திப்பழம்

Published: 

10 Nov 2025 20:40 PM

 IST

ஆரோக்கியமாக இருக்க மக்கள் தங்கள் அன்றாட உணவில் பல்வேறு வகையான உணவுகளை சேர்த்துக் கொள்ள தொடங்குகிரார்கள். இதில் ட்ரை ப்ரூட்ஸ் ஒரு முக்கியமான இன்று. ட்ரை ப்ரூட்ஸை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு (Health) மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இவற்றில் ஒன்று அத்திப்பழங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அத்திப்பழங்கள், உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், பலருக்கும் அத்திப்பழங்களை (Figs) நேரடியாக உட்கொள்ளலாமா அல்லது தண்ணீரில் ஊறவைத்து குடிப்பது நன்மை தருமா என்பது தெரியவில்லை. மேலும், மழை மற்றும் குளிர்காலத்தில் அத்திப்பழங்களை உட்கொள்வதும் பல வகைகளில் நன்மை தரும். அதை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் அத்திப்பழங்கள்:

அத்திப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு நீண்ட காலமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிடுவது மலச்சிக்கலைப் போக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த அத்திப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளன. மழை மற்றும் குளிர்காலத்தில் தூங்க செல்வதற்கு முன் அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்வது ஆரோக்கியம் தருவதுடன் குளிரில் இருந்து பாதுகாக்கும்.

ALSO READ: மாதுளை இலையில் இவ்வளவு மகத்துவமா..? இந்த பிரச்சனைகளை சரிசெய்யும்..!

அத்திப்பழத்தில் அதிக அளவு உள்ள வைட்டமின் ஏ, பெண்களில் மார்பக புற்றுநோய்க்கு மிகவும் நன்மை பயக்கும். அதன்ன்படி, ஒவ்வொரு நாளும் அத்திப்பழங்களை சாப்பிடுவது அதன் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதிலுள்ள தாதுக்கள் உடலை வலுப்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அதேபோல், அத்திப்பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளடக்கம் எலும்புகளை வலுப்படுத்துவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

உலர்ந்த அத்திப்பழங்களில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அத்திப்பழங்கள் இனிப்புச் சுவை கொண்டவை என்றாலும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வு. அதன்படி, ஊறவைத்த அத்திப்பழங்களில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இவற்றில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பளபளப்பான மற்றும் இளமையான சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. இரும்புச்சத்து நிறைந்துள்ள அத்திப்பழங்கள், இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

ALSO READ: வேண்டாமென்று வெறுக்கிறீர்களா..? மிஸ் பண்ணிடாதீங்க! ஆரோக்கியத்தை அள்ளி தரும் வெற்றிலை..!

அத்திப்பழங்களை எப்படி எடுத்துக்கொள்ளலாம்..?

உலர்ந்த அத்திப்பழங்களை ஸ்நாக்ஸாகவோ அல்லது பாலுடன் கலந்து ஷேக் செய்து சாப்பிடலாம். உலர்ந்த அத்திப்பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. அத்திப்பழங்களை இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தலாம். அத்திப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மட்டுமல்ல, வழக்கமான நுகர்வு பல நோய்களைத் தடுக்க உதவும். இருப்பினும், அவற்றை மிதமாக உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அதிகப்படியான நுகர்வு இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.