Health Tips: குளிர்காலத்தில் ஒரு கிளாஸ் ஹாட் வாட்டர்.. குவியும் ஆரோக்கிய நன்மைகள்..!
Hot Water Benefits: காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடிக்கவும். தண்ணீர் மிகவும் சூடாக இல்லாமல், வெதுவெதுப்பாகவோ அல்லது சற்று சூடாகவோ இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தவிர, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு சூடான நீரை எடுத்து கொள்ளலாம்.

சுடுதண்ணீரின் நன்மைகள்
குளிர் காலத்தில் (Winter) உடலை உள்ளிருந்து சுத்தமாக வைக்க வெதுவெதுப்பான நீர் மிகவும் பயனுள்ள இயற்கை வழியாகும். அதன்படி, தினமும் காலையில் ஒரு கிளாஸ் சூடான தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கனத்தை வெளியேற்றி, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது. அதன்படி, தினமும் நாம் என்ன சாப்பிடுகிறோம், நமது வாழ்க்கை முறை (Lifestyle) என்ன? எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறோம் என்பதை பொறுத்து நம் உடலில் நச்சுகள் குவிய தொடங்கும். இது நாளடைவில் படிப்படியாக நோயை வரவழைக்கும். அதன்படி, தினமும் சூடான நீரை காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். அந்த வகையில், நம் உடலை சுத்திகரிக்க எப்போதும் டீடாக்ஸ் பானங்கள் தேவையில்லை. ஒரு கிளாஸ் சூடான நீர் போதும்.
எளிமையாக கிடைக்கும் சூடான நீர் நமது செரிமானம், வளர்சிதை மாற்றம், தோல் மற்றும் இரத்த சுத்திகரிப்புக்கு சூப்பரான விஷயமாகும். வெதுவெதுப்பான நீர் நம் உடலில் உள்ள அசுத்தங்களைக் கரைத்து வெளியேற்றுகிறது. இது நமது உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்:
சூடான நீரைக் குடிப்பது குடலில் இருந்து முழுமையாக ஜீரணிக்கப்படாத உணவை மென்மையாக்கி நீக்குகிறது. தலைவலி, அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் படிப்படியாக மறைந்துவிடும். காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரைக் குடிப்பது வயிற்றுக்கு சிறந்த உணர்வை கொடுக்கும்.
எடை குறைப்புக்கு உதவும்:
வெதுவெதுப்பான நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கறைக்கிறது. உங்களுக்கு விருப்பம் எனில், சூடான நீரில் எலுமிச்சை அல்லது தேனை கலந்து குடிக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கும்:
வெதுவெதுப்பான நீர் சரியான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை நச்சு நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் நலத்தில் அக்கறை காட்டுவது மட்டுமின்றி, இது முகத்தை பிரகாசமாக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொண்டு வருகிறது.
சளி மற்றும் காய்ச்சலை குறைக்கும்:
வெதுவெதுப்பான நீர் சளியை நீர்த்துப்போகச் செய்து தொண்டை மற்றும் மார்பு அசௌகரியத்தைக் குறைக்கிறது. குளிர் காலத்தில், இது மருந்துகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த தூக்கம், குறைவான மன அழுத்தம்:
தூங்க முன் ஒரு கப் சூடான நீரைக் குடிப்பது தசைகளைத் தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது மன அழுத்தம், சோர்வு மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. சூடான நீர் சரும செல்களைப் புத்துணர்ச்சியூட்டும். இதுமட்டுமின்றி, இளமையான சருமத்தை ஊக்குவிக்கிறது. நச்சு நீக்கம் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைக் குறைத்து, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.
ALSO READ: குளிர்காலத்தில் காலையில் இந்த உணவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு!
சுடு தண்ணீர் குடிக்க சரியான வழி எது..?
காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடிக்கவும். தண்ணீர் மிகவும் சூடாக இல்லாமல், வெதுவெதுப்பாகவோ அல்லது சற்று சூடாகவோ இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தவிர, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு சூடான நீரை எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு ஒரு கிளாஸ் சூடான நீரை முழுமையாக குடிக்க விருப்பம் இல்லையெனில், நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் 1 கப் சூடான நீரைக் குடிப்பது உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.