Health Tips: டீ குடித்தவுடனே ஐஸ் வாட்டர் குடிப்பீர்களா..? இந்த 5 பிரச்சனைகள் வரலாம்!
Ice Water with Tea: டீ குடித்த உடனே பலரும் குளிர்ந்த நீரை (Ice Water) அதிகளவில் குடிக்கிறார்கள். இருப்பினும், இப்படி குடிக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், குடித்த உடனே குளிர்ந்த நீரை ஏன் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

டீ மற்றும் ஐஸ் வாட்டர்
இந்தியர்கள் மிகவும் விரும்பப்படும் ஒரு பானங்களில் டீ மிக முக்கியாமது. பெரும்பாலான மக்களுக்கு டீ (Tea) இல்லாமல் காலை விடியாது என்றே கூறலாம். டீ குடித்த பிறகுதான் தங்களது அன்றாட வேலைகளை செய்ய தொடங்குவார்கள். டீ குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. இது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாமல், இதயம், செரிமானம் மற்றும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். குறைந்த அளவில் தொடர்ந்து டீ குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் நீங்கள் அதை முறையாக உட்கொண்டால் மட்டுமே நன்மை பயக்கும். அதன்படி, டீ குடித்த உடனே பலரும் குளிர்ந்த நீரை (Ice Water) அதிகளவில் குடிக்கிறார்கள். இருப்பினும், இப்படி குடிக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், குடித்த உடனே குளிர்ந்த நீரை ஏன் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
செரிமான அமைப்புக்கு தீங்கு:
டீ அருந்திய உடனேயே குளிர்ந்த நீரைக் குடிப்பது செரிமான அமைப்பைப் பாதிக்கும். உண்மையில், சூடான ஒன்றை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பது செரிமானத்திற்குத் தேவையான நொதிகளை சீர்குலைக்கும். இது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதுடன், சரியான செரிமானத்தைத் தடுக்கவும் செய்கிறது. இது நாளடைவில் வயிற்றில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ALSO READ: தினமும் RO வாட்டர் குடிக்கிறீர்களா..? குடிக்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
நெஞ்சு வலி:
டீ அருந்திய உடனே குளிர்ந்த நீரைக் குடிப்பதும் நெஞ்சு வலியை ஏற்படுத்தும். சூடான ஒன்றை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது அமிலத்தன்மை சிறிது நேரத்தில் மார்பில் அழுத்தத்தை கொடுத்து நெஞ்சு வலிக்கு வழிவகுக்கும்.
பல் பிரச்சினைகள்:
உங்கள் பற்கள் பலவீனமாக இருந்தால், சூடான பொருட்களை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் கூச்சத்தை தருவதுடன், நாளடைவில் ஈறுகளை பலவீனப்படுத்தக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்:
டீ அருந்திய உடனேயே குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது மாறிவரும் வானிலையுடன் ஏற்படும் வைரஸ் நோய்களுக்கு உங்களை அதிகமாக ஆளாக்குகிறது. எனவே, டீ அருந்திய பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
ALSO READ: மழைநீர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? இது ஆரோக்கியத்திற்கு நல்லதா..?
அமிலத்தன்மையை அதிகரிக்கும்:
டீ அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பது வயிற்றில் அமில அளவை அதிகரிக்கும். இதனால், வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று வலியை ஏற்படலாம். எனவே, நீங்கள் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், டீ அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.