Health Tips: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள்? எந்த உணவுகள் சாப்பிடுவது ஆரோக்கியமானது?
Food To Avoid In Breastfeeding: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். அதன்படி, இந்த கட்டுரையில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பால்
ஒரு தாயாக மாறுவது பல பொறுப்புகளை தரும். ஒரு குழந்தை பிறந்த பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் (Breast Milk) மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். அதன்படி, இந்த கட்டுரையில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். ஏனெனில் இந்த உணவுகளை (Foods) சாப்பிடுவது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சத்தான உணவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் தாயின் ஆற்றலைத் தக்கவைக்கிறது.
ALSO READ: பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கலாமா? வேண்டாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
அதிகம் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்:
- கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை மற்றும் இலை காய்கறிகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை பாலூட்டும் தாய்மார்களின் உடலில் ஆற்றலைப் பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்தும் புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது. பாதாம், வால்நட்ஸ் மற்றும் வேர்க்கடலையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் உள்ளன. இவை வளரும் குழந்தையின் மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதுமட்டுமின்றி, தாய்மார்களின் பாலூட்டலை மேம்படுத்தவும் உதவுகின்றன.
- கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைக்கு வைட்டமின் ஏ வழங்குவதோடு, உடலில் ஆற்றலையும் அதிகரிக்கும். ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை சோர்வைக் குறைத்து பாலூட்டலுக்கு உதவுகின்றன.
- சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். அதேபோல், ஓட்ஸ் மற்றும் ப்ரவுன் ரைஸ் போன்ற தானியங்களைச் சேர்ப்பது தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது.
தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை
டீ – காபி:
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட காஃபின் நிறைந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 5 கப் காஃபின் நிறைந்த பானங்களை உட்கொள்வது குழந்தைய்ன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது குழந்தைகளுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் கொய்யாப்பழம் ஆரோக்கியமானதா? குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
மது:
தாய்ப்பால் கொடுக்கும் ஒவ்வொரு தாயும் மதுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
டிரான்ஸ் கொழுப்புகள்:
கேக்குகள், பேக்கரி பொருட்கள், கிரீம், பீட்சா, பர்கர்கள் போன்ற உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளன. சில உணவுகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் உடலில் அதிகரிக்கும்போது, DHA உள்ளடக்கம் குறைகிறது.இது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். எனவேம் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.