Karuppu: சூர்யாவின் கருப்பு சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Karuppu Satellite Rights: இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் தமிழில் வெளியீட்டிற்கு பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் கருப்பு. இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படம் விரைவில் வெளியாகும் என்ற நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Karuppu: சூர்யாவின் கருப்பு சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கருப்பு

Published: 

15 Dec 2025 17:25 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் சூர்யா தற்போது தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்களுடனும் இணைந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் கைவசத்தில் கருப்பு படத்துடன் கிட்டத்தட்ட 2 படங்கள் இருக்கிறது. அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்க, சூர்யா லீட் கதாநாயகனாக இணைந்து நடித்து வந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடி ஆறு என்ற படத்திற்கு பின் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் படப்பிடிக்கப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகியிருந்தது. இந்நிலையில் கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், தற்போது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் கருப்பு படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ தமிழ்தான் (Zee Tamil) வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படப்பிடிப்பை முடித்தது சூர்யா 46 படக்குழு… வைரலாகும் போட்டோஸ்

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து வெளியான வீடியோ பதிவு :

இந்த கருப்பு படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரித்துவருகிறார். மேலும் இதில் சூர்யா மற்றும் திரிஷாவுடன் இணைந்து நடிகர்கள் ஆர்.ஜே. பாலாஜி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் இவர் முதல் முறையாக ஒப்பந்தமான பிரம்மாண்ட படம் இதுவாகும்.

இதையும் படிங்க: யாரும் யாருக்கும் போட்டி இல்லை.. விஜய் – சிவகார்த்திகேயன் குறித்து சூரி கருத்து!

இந்த படத்தின் முதல் பாடல் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டியையோடு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்நது இப்படம், 2026ம் ஆண்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனால் இப்பாடம் 2026 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதில் எது உண்மை என தெரியவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்