Ravi Mohan : ரவி மோகனின் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. புதிய படம் குறித்து வெளியாகும் அறிவிப்பு!

Ravi Mohan New Movie Update : ரவி மோகன், தற்போது நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும் தொடர்ந்து, இயக்குநராகவும் படங்களை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ravi Mohan : ரவி மோகனின் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. புதிய படம் குறித்து வெளியாகும் அறிவிப்பு!

யோகி பாபு மற்றும் ரவி மோகன்

Published: 

09 Sep 2025 17:25 PM

 IST

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடிப்பில், தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai). இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆனது ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையுடன் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து ரவி மோகன், கராத்தே பாபு (Karathey babu), பராசக்தி (Parasakthi) , ஜீனி போன்ற படங்களில் நடித்துவந்தார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ரவி மோகன் ஸ்டூடியோஸ் (Ravi Mohan Studios) நிறுவனத்தின் கீழ் ப்ரோகோட் (BroCode) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கிவருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பதையும் கடந்து, இவர் இயக்குநராகவும் படங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் யோகி பாபுவை (Yogi Babu) வைத்து, “ஆன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man) என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இதையும் படிங்க : எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி

இந்நிலையில் நடிகர் ரவி மோகனின் பிறந்தநாள் வரும் 2025 செப்டம்பர் 10ம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதே நாளில் “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆன் ஆர்டினரி மேன் படம் குறித்த பதிவு :

யோகிபாபு மற்றும் ரவி மோகன் கூட்டணி

நடிகர் யோகிபாபு மற்றும் ரவி மோகன் கூட்டணியில் கோமாளி, காதலிக்கநேரமில்லை என பல படங்ககள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் ரவி மோகன், யோகி பாபுவை வைத்து புதிய கமர்ஷியல் காமெடி படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : தனுஷின் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவேண்டியது… – ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்!

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை, ரவி மோகனின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவிலே நடைபெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானதாக கூறப்படும் நிலையில், நாளை 2025 செப்டம்பர் 10ம் தேதியில் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ரவி மோகனின் ப்ரோகோட் படத்தின் ப்ரோமோ வீடியோ :

நடிகர் ரவி மோகனின் இந்த ப்ரோகோட் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கிவருகிறார். இந்த படத்தில் ரவி மோகனுடன், எஸ்.ஜே. சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.