Toxic: யாஷ் ரசிகர்களே தயாரா? ‘டாக்சிக்’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Yashs Toxic Glimpse Release: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் டாக்சிக். இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இதன் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Toxic: யாஷ் ரசிகர்களே தயாரா? டாக்சிக் திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டாக்சிக் திரைப்படம்

Published: 

07 Jan 2026 16:55 PM

 IST

கன்னட சினிமாவில் மிகவும் பிரளமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் யாஷ் (Yash). ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்துவந்த இவர், பின் சினிமாவிலும் கதாநாயகனாகவே தொடர்ந்தார். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் (Sivakarthkeyan) மற்றும் கவின் போன்ற நடிகர்களை போலவே கன்னட சினிமாவில் நடிகர் யாஷ் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் படங்களுக்கு ஆரம்பகாலத்தில் கர்நாடகாவைத் தாண்டி அந்தளவிற்கு வரவேற்புகள் இல்லையென்றாலும், கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கே.ஜி.எஃப் (KGF) படத்தின் வெளியீட்டிற்கு பின் பான் இந்திய அளவில் பிரபலமானார். இந்த் பிரபலத்தை தொடர்ந்து, மீண்டும் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் கே.ஜி.எஃப் 2 படத்திலும் நடித்து பான் இந்திய ஹிட் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த ஹிட் படங்களை தொடர்ந்து இவரின் நடிப்பு, எழுத்து மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் மிக பிரம்மாண்ட படம்தான் டாக்சிக் : எ ஃபேரி டைல் ஃபார் க்ரோவுன்- அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown-Ups).

இந்த படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, ஜன நாயகன் திரைப்படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் “நாளை 2026 ஜனவரி 8ம் தேதியில் நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதை 2026 ஜனவரி 8ம் தேதியில் காலை 10:10 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது”.

இதையும் படிங்க: ஆக்ஷன் கதாநாயகியாக சமந்தா.. வெளியானது ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

டாக்சிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

இந்த் டாக்சிக் படத்தில் நடிகர் யாஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா போன்ற நடிகைகளும் நடிகர் டோவினோ தாமஸ் மிக முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்களாம். இதில் இப்படத்தின் நடிகைகள் அறிமுக போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!

அந்த வகையில் இப்படத்திற்கு ரவி பஸ்ரூ மற்றும் அனிருத் இணைந்து இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ 650 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

Related Stories
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு – வைரலாகும் அப்டேட்
சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ
ஆண் – பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்… இயக்குநர் சுதா கொங்கரா
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – எத்தனை லட்சம் தெரியுமா?
ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்… சிபிஎஃப்சி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Dhanush: அந்த படத்தில் நடிக்கும்போது தயங்கினேன்.. நடிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டேன் – தனுஷ் ஓபன் டாக்!
ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..