Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Toxic Movie Trailer Update: நடிகர் யாஷின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் டாக்ஸிக். இதை இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2026 மார்ச் 9ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகவுள்ளது என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? - இணையத்தில் வைரலாகும் தகவல்!

டாக்ஸிக்

Updated On: 

01 Mar 2026 15:06 PM

 IST

கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகனாக நுழைந்து, தற்போது பான் இந்திய பிரம்மாண்ட நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த 2 படங்கள் பான் இந்திய அளவில் கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள புது திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இதை இயக்கியுள்ளார். இப்படத்தில் யாஷுடன் நடிகர்கள் நயன்தாரா (Nayanthara), டோவினோ தாமஸ் (Tovino Thomas), ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth), கியாரா அத்வானி (Kiara Advani), ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது மிகவும் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இது பெண்களை மையமாக கொண்டு கதையாகவும் உருவாகியிருப்பதாக இப்படத்தில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது. ரிலீஸ் தேதி கிட்ட நெருக்கும் நிலையில் இதன் முதல் பாடல் வரும் 2026 மார்ச் 2ம் தேதியில் வெளியாகிறது. இதை தொடர்ந்து இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என தகவல்கள் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததே நான் மறந்துவிட்டேன் – ஹாரிஸ் ஜெயராஜ்!

யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:

இந்த டாக்ஸிக் படத்தில் யாஷ், ரயா மற்றும் டிக்கெட் என இரு வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ 600 முதல் 700 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை யாஷின் மாஸ்டர் மைண்ட் தயாரிப்பு நிறுவனமும், ஜன நாயகன் படத்தை தயாரித்திருந்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 3 இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம் – வைரலாகும் தகவல்

இந்த டாக்ஸிக் படமானது உலகமெங்கும் கிட்டத்தட்ட 7 மொழிகளில் வெளியாகுவதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லரை வரும் 2026 மார்ச் 8ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இது தொடர்பான உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

டாக்ஸிக் திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் குறித்த பதிவு:

இந்த டாக்ஸிக் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துவரும் நிலையில், இப்படம் கிட்டத்தட்ட ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. விரிவில் இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், என நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்