நடிகை பிரதியுஷாவின் காதலருக்கு 2 ஆண்டுகள் சிறை…. 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு – என்ன நடந்தது?

Actress Pratyusha Suicide Case Verdict : தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பிரதியுஷாவின் தற்கொலை வழக்கில் அவரது காதலருக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆண்டுகள் சிறை தண்ணடனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நடிகை பிரதியுஷாவின் காதலருக்கு 2 ஆண்டுகள் சிறை.... 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு - என்ன நடந்தது?

நடிகை பிரதியுஷா

Published: 

17 Feb 2026 20:26 PM

 IST

மறைந்த நடிகை பிரதியுஷாவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் (Supreme Court) பிப்ரவரி  17, 2026 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி அவரது காதலருக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்,  சித்தார்த் ரெட்டி நான்கு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு  வழங்கிய தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சித்தார்த் ரெட்டியை சரணடைய உத்தரவிட்டது. இந்த சம்பவம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிரதியுஷாவின் வழக்கில் காதலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

மறைந்த கதாநாயகி பிரத்யுஷாவுக்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. தமிழில் முரளிக்கு ஜோடியாக மனு நீதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த்திற்கு ஜோடியாக இவர் நடித்த தவசி திரைப்படமும், பாரதிராஜாவின் கடல் பூக்கள் படமும் இன்றளவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப பெற்று வருகிறது. மேலும் கடைசியாக சத்யராஜிற்கு ஜோடியாக அவர் நடித்த சவுண்ட் பார்ட்டி திரைப்படம் அவரது இறப்பிற்கு பின் வெளியானது.

இதையும் படிக்க : WIth Love: வித் லவ் பட தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தற்போதைய தெலுங்கானா மாநிலம் புவனகிரியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பிரதியுஷா. கல்லூரி நாட்களில் நடிப்பில் ஆர்வத்தின் காரணமாக திரைப்படத் துறையில் நுழைந்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ராயுடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலிருந்தே அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு, தெலுங்கில், சினேகம் ஆனந்த் இதீரா மற்றும் கலுசுகானி போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அந்த நேரத்தில் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் தனது வாழ்க்கையில் முன்னேறிய நிலையில், ​​பிப்ரவரி 23, 2002 அன்று தனது காதலன் சித்தார்த் ரெட்டியுடன் தற்கொலைக்கு முயன்றார். இந்த முயற்சியில் பிரதியுஷா இறந்த நிலையில், சித்தார்த்த ரெட்டி குணமடைந்தார். இருப்பினும், பிரதியுஷாவின் தாய் சரோஜினி, தனது மகள் சித்தார்த்த ரெட்டியால் இறந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ​​போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

24 ஆண்டுகளாக நடந்த வழக்கு

இந்த வழக்கு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில், தெலங்கானா மாநிலம் நம்பள்ளியில் உள்ள நீதிமன்றம் சித்தார்த்த ரெட்டிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றம் தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தை ரூ. 50,000 ஆக உயர்த்தியது. இருப்பினும், இந்தத் தீர்ப்பின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி அவரது தாயார் சரோஜினி 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதன் பின்னர், வழக்கு விசாரணையில் உள்ளது.

இதையும் படிக்க : 9 நியோ டைடல் பார்க்.. 25 ஆயிரம் பேருக்கு வேலை.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. லிஸ்டில் உங்க ஊர் இருக்கா!

கடந்த ஆண்டு நவம்பரில், சித்தார்த்த ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கடந்த ஆண்டு நவம்பரில், பிரதியுஷாவின் தாய் சரோஜினி தனது தண்டனையை அதிகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்தார்த் ரெட்டியை காவல்துறையினரிடம் சரணடைய உத்தரவிட்டது.

Follow Us
Related Stories
பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ஜெய்… டெக்ஸ்லா படக்குழு வெளியிட்ட சிறப்பு பதிவு
Mr. X Movie: ஆர்யா – கௌதம் கார்த்திக்கின் ‘மிஸ்டர் எக்ஸ்’ பட ரிலீஸ் எப்போது? – படக்குழு அறிவிப்பு!
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் சாய்ஸ் கிடையாது – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
பிரசாந்த் கூட அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை – மனம் திறந்த தேவயானி
Atlee: கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்… நீளிரா திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்