Vishnu Vishal : ராட்சசன் 2 உருவாகிறதா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்!
Vishnu Vishal About Ratsasan And Gatta kusthi Movies Sequel : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் ரசிகர்களால் மறக்கமுடியாத சைக்கோ திரில்லர் படமாக அமைந்தது ராட்சசன். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் பாகம் 2 உருவாகுவது குறித்து விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.

ராட்சசன் மற்றும் கட்டா குஸ்தி
நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு (Vennila Kabadi Kuzhu) படத்தின் மூலம், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் இவர். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் முன்னணி நடிகராகத் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவரின் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் திரைப்படம்தான் ராட்சசன் (Ratsasan). கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் ராம் குமாரின் (Ram Kumar) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஷ்ணு விஷால் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் (Amala Paul) நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வெளியாகி ஹிட்டான இப்படமானது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சைக்கோ கில்லர் கதைக்களம் (Psycho Killer Plot) கொண்ட இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் படபடப்புடன் சலிக்காமல் பார்க்கும் படமாக இப்படம் இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் பாகம் 2 உருவாக்கவுள்ளதாகச் சமீப நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஓஹோ எந்தன் பேபி படப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதில் ராட்சசன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 (Gatta kusthi 2) போன்ற திரைப்படங்கள் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ராட்சசன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 படம் குறித்து விஷ்ணு விஷால் பேச்சு :
சமீபத்தில் நடைபெற்ற ஓஹோ என்னதான் பேபி பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், “தனது தயாரிப்பில் வரும் 2026ம் ஆண்டு ராட்சசன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 போன்ற திரைப்படங்கள் உருவாகிறது. மேலும் இந்த ஆனது இறுதியில் ராட்சசன் 2 படத்தில் இணைகிறேன்” என அவர் பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் பேசிய வீடியோ :
#VishnuVishal Next Film 💥 #GattaKusthi2 And #Ratchasan2 This film is happening next year.
pic.twitter.com/RSrtSg6cW1— Movie Tamil (@MovieTamil4) July 7, 2025
கட்டா குஸ்தி திரைப்படம் :
இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் கட்டா குஸ்தி. இந்த படமானது கடந்த 2022 ஆண்டு வெளியாகியிருந்தது. இப்படத்தின் நடிகர் விஷ்ணு விஷால் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை நடிகர் ரவி தேஜாவுடன், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
குஸ்தி மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் வெளியான இப்படமானது வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பாகம் 2 உருவாக்கவுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அப்டேட்கொடுத்துள்ளார். அநேகமாக இப்படத்தின் 2ம் பாகம் வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.