ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது விஷாலின் மகுடம் படக்குழு

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இங்த நிலையில் நடிகர் விஷால் தற்போது மகுடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இவரது நடிப்பில் வெளியான 30-வது படம் இது என்பது ஆகும்.

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது விஷாலின் மகுடம் படக்குழு

மகுடம்

Published: 

01 Oct 2025 20:39 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் (Actor Vishal). நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானாலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மகுடம்.

இந்தப் படம் நடிகர் விஷால் நடிப்பில் உருவாக உள்ள 30-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் 21 ஆண்டுகளில் தற்போது 30-வது படத்தில் நடிகர் விஷால் நடித்து வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது மகுடம் படக்குழு:

அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் ரவி அரசு எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் நிலையில் படம் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இன்று ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read… ஓடிடியில் வெளியானது நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படம்!

நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்தப் படத்தை பார்த்துவிட்டு தியேட்டர்ல விட்ட காரை மறந்து வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன் – இயக்குநர் விக்ரமனை வெகுவாக பாதித்தப் படம் எது தெரியுமா?

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..