என் குடும்பமே 3 வேலை சாப்பிட நீங்கதான் காரணம் – நடிகர் விஷால்
Actor Vishal: நடிகர் விஷால் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது 21 வருடங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நாயகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகர் விஷால் (Actor Vishal). அதன்படி இயக்குநர் காந்தி கிருஷ்ணன் எழுதி இயக்கிய படம் செல்லமே. இந்தப் படம் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக அறிமுகம் ஆனார். இதில் இவருடன் இணைந்து நடிகர்கள் ரீமா சென், ரேஷ்மி மேனன், பரத், விவேக், கிரீஷ் கர்னாட், ஸ்ரீரஞ்சனி, கொக்கு மனோகர் சம்பத் ராம், கே.பி.மோகன், பாய்ஸ் ராஜன், மும்தாஜ், பானுப்ரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிஜே சினிமா சார்பாக தயாரிப்பாளர்கள் வி.ஞானவேலு மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்த நிலையில் மிகவும் எமோஷ்னலாக நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்களால் தான் இது எல்லாம் சாத்தியம் ஆனது:
இந்த நிலையில் நடிகர் விஷால் நேற்று 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சப்பிட்டுக்கொண்டே வீடியோவில் பேசிய நடிகர் விஷால் என்னடா சாப்டுட்டே பேசுறேன்னு பாக்குறீங்களா? நானும் என் குடும்பமும் கடந்த 21 வருஷமான 3 வேலை சாப்பிட நீங்கதான் காரணம்.
ஆமா நான் சினிமாவில் அறிமுகம் ஆகி 21 வருஷம் ஆச்சு. இப்போ நான் என்னோட 35-வது படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். இது எல்லாமே உங்களால மட்டுமே சாத்தியம் ஆனது என்று நடிகர் விஷால் அந்த வீடியோவில் மிகவும் எமோஷ்னலாக பேசியிருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.